Holy Kural - 095
95. மருந்து - Medicine
1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. Wind, bile and phlegm three cause disease So doctors deem it more or less. V# 941 2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். After digestion one who feeds His body no medicine needs. V# 942 3. அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு. Eat food to digestive measure Life in body lasts with pleasure. V# 943 4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. Know digestion; with keen appetite Eat what is suitable and right. V# 944 5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. With fasting adjusted food right Cures ills of life and makes you bright V# 945 6. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health. V# 946 7. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். who glut beyond the hunger's fire Suffer from untold diseases here. V# 947 8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். Test disease, its cause and cure And apply remedy that is sure. V# 948 9. உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். Let the skilful doctor note The sickmen, sickness, season and treat. V# 949 10. உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course. V# 950
Post a Comment