Holy Kural - 123
123. பொழுதுகண்டிரங்கல் - Eventide sigh
1. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. Bless you! you are not eventide But killing dart to wedded bride! V# 1221 2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim! V# 1222 3. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலைதுனி அரும்பித் துன்பம் வளர வரும். Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain. V# 1223 4. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். Lover away, comes eventide Like slayer to field of homicide. V# 1224 5. காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. What good have I done to morning And what evil to this evening? V# 1225 6. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். Evening pangs I have not known When my lord nev'r left me alone. V# 1226 7. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay. V# 1227 8. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart. V# 1228 9. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs. V# 1229 10. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth. V# 1230
Send Your Comments to phdsiva@mccrf.org