MCCRF - A global volunteer network

W173. விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைப்பது, நிஜத்தில் நான் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன் என்று விளங்குமாறு எனக்கு அருள்புரி.(Whispers from Eternity - Tamil & English)



173. விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைப்பது, நிஜத்தில் நான் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன் என்று விளங்குமாறு எனக்கு அருள்புரி.
எப்படி நாங்கள் தூங்கி ஓய்வெடுத்து, சற்றுநேரம் விழித்து, மீண்டும் உறங்குகிறோமோ, அதேபோல் பிறப்பு-இறப்பு என்னும் நிலையற்ற கனவுகளின் அடித்தளத்திலிருந்து, நாம் சிறிது காலத்திற்கு தோன்றுவோம், பின் மரணத் தூக்கத்தில் ஆழ்வோம், மீண்டும் மற்றொரு ஜென்மப் போராட்டக் கனவினைக் காணத் துவங்குவோம்.

ஜென்மசுழற்சிச் சறுக்குப்பாதையில், நாம் ஒரு கனவினிலிருந்து மற்றொன்றுக்கு சறுக்கிக் கொண்டுள்ளோம். வானகத்தீயினாலான தேரில் அமர்ந்து கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றுக்கு உருண்டு சென்று கொண்டுள்ளோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் லட்சியக்கனவுகள், தோல்விகள், வெற்றிகள் ஆகியவைகளைக் கடந்து செல்வோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஆழ்கடலாய்ச் சோதிக்கும் துன்பங்கள், சிரிப்புப் பேரலைகள், அலட்சியச் சுழல்கள், பெரிய விழாக்காட்சி நீர்ப்பரப்புகள், மரணங்கள், பிறப்புகள் - ஆகிய கனவுகளைக் கடந்து செல்வோம்.

நான் உண்மையிலேயே விழித்தது உன்னில் மட்டுமே!

பிறகு, நான் விழித்துக் கொண்டிருந்தேன் என்று நான் முன்னம் நினைத்த போது, நான் கனவுதான் கண்டுகொண்டிருந்தேன் என்பதை இப்போது நன்கு உணர்ந்துவிட்டேன்.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
173 Bless me, that I may know that I am Dreaming while I think that I am awake.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.