Holy Kural - 037
37. அவா அறுத்தல் - Curbing of desire
1. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. Desire to all, always is seed From which ceaseless births proceed. V# 361 2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். If long thou must, long for non-birth It comes by longing no more for earth. V# 362 3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல். No such wealth is here and there As peerless wealth of non-desire. V# 363 4. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் To nothing crave is purity That is the fruit of verity. V# 364 5. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் The free are those who desire not The rest not free in bonds are caught. V# 365 6. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா Dread desire; Virtue is there To every soul desire is snare! V# 366 7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் Destroy desire; deliverance Comes as much as you aspire hence. V# 367 8. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends. V# 368 9. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy. V# 369 10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். Off with desire insatiate You gain the native blissful state. V# 370
Send Your Comments to phdsiva@mccrf.org