MCCRF - A global volunteer network

Holy Kural - 108

108. கயமை - Meanness




1. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல். The mean seem men only in form We have never seen such a sham. V# 1071 2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். The base seem richer than the good For no care enters their heart or head. V# 1072 3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். The base are like gods; for they too As prompted by their desire do. V# 1073 4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். When the base meets a rake so vile Him he will exceed, exult and smile. V# 1074 5. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. Fear forms the conduct of the low Craving avails a bit below. V# 1075 6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். The base are like the beaten drum Since other's secrets they proclaim. V# 1076 7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு. The base their damp hand will not shake But for fists clenched their jaws to break. V# 1077 8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். The good by soft words profits yield The cane-like base when crushed and killed. V# 1078 9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். Faults in others the mean will guess On seeing how they eat and dress. V# 1079 10. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. The base hasten to sell themselves From doom to flit and nothing else. V# 1080

 

Powered by Blogger.