Holy Kural - 096
96. குடி - Nobility
1. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. Right-sense and bashfulness adorn By nature only the noble-born. V# 951 2. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். The noble-born lack not these three: Good conduct, truth and modesty. V# 952 3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. Smile, gift, sweet words and courtesy These four mark true nobility. V# 953 4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். Even for crores, the noble mood Cannot bend to degrading deed. V# 954 5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. The means of gift may dwindle; yet Ancient homes guard their noble trait. V# 955 6. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். Who guard their family prestige pure Stoop not to acts of cunning lure. V# 956 7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. The faults of nobly-born are seen Like on the sky the spots of moon. V# 957 8. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். If manners of the good are rude People deem their pedigree crude. V# 958 9. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். Soil's nature is seen in sprout The worth of birth from words flow out. V# 959 10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. All gain good name by modesty Nobility by humility. V# 960
Send Your Comments to phdsiva@mccrf.org