W163. எல்லாம் ஆனந்தமயம் என்று என்னை உணரச் செய்.(Whispers from Eternity - Tamil & English)
163. எல்லாம் ஆனந்தமயம் என்று என்னை உணரச் செய்.
நான் ஆனந்த மஹாசமுத்திரத்தில் பொங்கி எழுந்த ஓர் இன்ப நுரைக்கடல். என் வாழ்க்கைச் சாகரம் ஆனந்தப் பேரலைகளால் நிறைந்துள்ளது. முடிவற்ற என் புன்னகையின் சிற்றலைகளும் வாழ்வின் எதிரலைகளும், எல்லா இதயங்களுக்கும் பரவிச்சென்று, இறுதியில் எல்லையற்ற ஆனந்தத்தின் நெஞ்சில் ஓய்வெடுத்துறங்க செல்கின்றன.
எல்லா ஆனந்தப் பேரலைகளின் மேலும் நடனமாட விரும்பும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை. ஆனந்த சாகரமாகப் பரந்துவிரியப் போராடும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை.
என்னை ஆனந்த ஒளிவிளக்காக ஆக்கு, அதன்துணையால் புயலால் அவதியுறும் வாழ்க்கைக் கலனங்களை வழிநடத்திப் பத்திரமாக ஆனந்தக் கரைக்குக் கொண்டுசேர்ப்பேன்.
ஒவ்வொரு செயல் கொடியும் ஆனந்தத் திராட்சைக் கொத்துக்களை சுமக்கட்டும். நான் வாழ்வின் அனைத்துச் சிறு இன்பங்களும் நிறைந்த திராட்சைத் தோட்டத்திலிருந்து சேகரித்த தேவ மதுரசத்தைப் பருகுவேனாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
163 Make me feel that everything is Joy.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org