W129. என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய் (Whispers from Eternity - Tamil & English)
129. என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்
இறைத்தந்தையே, மாகாற்றால் அலைக்கழிக்கப்பட்ட என் உள்ளம், என் அலட்சியமெனும் மேகங்களினால் மறைக்கப்பட்ட உன் சாந்நித்தியத்தின் வெள்ளிக்கீற்றின் தரிசனத்தைப் பெற நான் பிரார்த்திக்கிறேன். உன் நம்பிக்கையெனும் சந்திரன் என் இதயத்தில் குளிர்கிரணங்களை வீசட்டும். என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்; உன் அன்பின் நிலவொளியின் ஏற்றத்தினால் அறியாமை மூட்டங்கள் விலகுகின்றன. ஒளியின் தந்தையே, சிதிலமடைந்த என் உள்ளப் படகு உன் ஆனந்தக் கரையை மகிழ்ச்சியுடன் தரிசிக்கின்றது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
129 Thou art slowly rising on the horizon of my mind.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org