Holy Kural - 085
85. புல்லறிவாண்மை - Petty conceit
1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு. Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts. V# 841 2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். When fool bestows with glee a gift It comes but by getter's merit. V# 842 3. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed. V# 843 4. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னுஞ் செருக்கு. Stupidity is vanity That cries 'We have sagacity' V# 844 5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். Feigning knowledge that one has not Leads to doubt ev'n that he has got. V# 845 6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. Fools their nakedness conceal And yet their glaring faults reveal. V# 846 7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. The fool that slights sacred counsels Upon himself great harm entails. V# 847 8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். He listens not nor himself knows Plague is his life until it goes. V# 848 9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right. V# 849 10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். To people's 'Yes' who proffer 'No' Deemed as ghouls on earth they go. V# 850
Send Your Comments to phdsiva@mccrf.org