W65. நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி. (Whispers from Eternity - Tamil & English)
65. நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.
என் மனசாம்ராஜ்யம் குழப்பக் குப்பையால் மண்டிக் கிடக்கிறது. என் ஆன்ம அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட நகரத்தில் உன் சக்தி மழையைப் பொழி. என்னுள்ளே இருக்கும் கொடூரமான ஆன்ம அறியாமையை முற்றிலும் அகற்ற, உன் கருணை நீரோட்டத்தை வெள்ளமாக அனுப்பு. உன் அன்பின் பெருமழை வெள்ளம் நிற, ஜாதி, இன வேற்றுமைத் தடைகளை அடித்துத் தள்ளட்டும்.
அழுக்கடைந்த, சீர்மையில்லா என் எண்ணக்குழந்தைகளை உன் ஞானப் பொழிவினால் குளிப்பாட்டு.
என் கரடுமுரடான இருண்ட வாழ்க்கைப் பாதையில், உன் அன்பு ரோஜா மலர்களினால் தூவப்பட்ட கம்பளத்தை விரி. உன் சுகந்த மணத்தை நுகர்ந்துகொண்டு, மிருதுவான மலர்ப்பாதையில் நடைபோட்டு, விரைவில் உன் ரோஜா அரண்மனைக்கு வந்துசேர்வேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
65 May the showers of Thy love flood through the walls of Color, Class, and Race-Prejudice
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org