W103. கடவுளை எல்லாவற்றிலும் காணுமாறு ஆன்மீகக் கண்ணைத் திறக்கக் கோரி உரிமையுடன்-வேண்டுதல்*. (Whispers from Eternity - Tamil & English)
103. கடவுளை எல்லாவற்றிலும் காணுமாறு ஆன்மீகக் கண்ணைத் திறக்கக் கோரி உரிமையுடன்-வேண்டுதல்*.
இறைத்தந்தையே, பூக்களின் அழகு, கடந்துசெல்லும் வாழ்க்கைக் காட்சிகளின் கோலம், அமைதியாகத் தவழ்ந்து செல்லும் மேகங்களின் வனப்பு ஆகியவை என் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. என்னுள்ளே உள்ள கண்ணை உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதவண்ணம் திறக்க வை.
அதன் பார்வையால் - மேலே, கீழே, சுற்றிலும், உள்ளே, வெளியே என எங்கும் உன்னையே காண வேண்டும். எல்லாவற்றிலும் உன்னையன்றி வேறெதையும் காணாமலிருக்க எனக்குக் கற்பி. மகத்தான உன் ஆட்கொள்ளும் அழகை எல்லா அழகுகளிலும் காணுமாறு, என்னுள்ளே உள்ள அந்தக் கண்ணினைத் திற!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
* - இந்த பிரார்த்தனை-எண்ணம் நம் உயருணர்வில் தோய்ந்து நிலைபெறும் வரை, இந்த வேண்டுதலை மனத்திலே முழு கவனத்துடன், நம்பிக்கையுறுதியுடன் ஜபிக்க வேண்டும்.
Original:
103 Demand* for the opening of the spiritual eye, to find God in everything.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org