W117. ஞான அனுபூதி பெற உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
117. ஞான அனுபூதி பெற உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, அன்பான இறைத்தந்தையே, ஜகத்தின் பரமாத்மாவே, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வே, நண்பர்களுக்குள்ளிருக்கும் நண்பனே, என் வாழ்வின் மூல ரகசியத்தை எனக்கு விளக்கு! நான் மூச்சற்றும் மரணமற்றும் சும்மா இருக்கும்போது, உன்னை வழிபட எனக்குக் கற்பி. என் பக்திக்கனலினால் என் அறியாமையைச் சுட்டெரித்து விடு. என் ஆன்ம நிஸ்சல நிலையில் - வா, பேருணர்வே, வா! என்னை முழுதுமாக ஆட்கொள், உன் மரணமற்ற இருப்பை என்னுள்ளேயும், என்னைச் சுற்றியும் நான் உணருமாறு என்னைப் பழக்கு. வா, பேருணர்வே, வா! வா, பேருணர்வே, வா!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
117 Prayer-Demand for Illumination.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org