Holy Kural - 043
43. அறிவுடைமை - The possession of knowledge
1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். Wisdom's weapon wards off all woes It is a fort defying foes. V# 421 2. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. Wisdom checks the straying senses Expels evils, impels goodness. V# 422 3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. To grasp the Truth from everywhere From everyone is wisdom fair. V# 423 4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends. V# 424 5. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. The wise-world the wise befriend They bloom nor gloom, equal in mind. V# 425 6. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு. As moves the world so move the wise In tune with changing times and ways. V# 426 7. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். The wise foresee what is to come The unwise lack in that wisdom. V# 427 8. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். Fear the frightful and act wisely Not to fear the frightful's folly. V# 428 9. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். No frightful evil shocks the wise Who guard themselves against surprise. V# 429 10. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். Who have wisdom they are all full Whatev'r they own, misfits are nil. V# 430
Send Your Comments to phdsiva@mccrf.org