W204. மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக. (Whispers from Eternity - Tamil & English)
204. மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.
எங்கள் அனைவரின் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஜோதித் தலத்தை நாடி பல நிஜமான பாதைகளில் பயணிக்கின்றோம்.
பல்வேறு மதங்கள் எல்லாம் உன் ஒரு உண்மை மரத்தின் கிளைகள் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட ஆகம உபதேசங்களெனும் கிளைகள் அனைத்திலிருந்தும் தொங்கும், பிரக்ஞானத்தால் சோதிக்கப்பெற்ற, கனிந்த, சுவையான ஆன்ம-ஞானப் பழங்களை நாங்கள் சுவைத்து இன்புற எங்களுக்கு அருள்புரி.
ஒன்றேயான உன் அமைதிக் கோயிலில், நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை, நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. அந்த ஆன்ம கீதத்தின் மூலம் நீ உன் அமைதிச் சபதத்தை விட்டு, எங்களை அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் தூக்கி அமர்த்திக் கொள்வாயாக. அதன்மூலம் எங்கள் எல்லா மென்மையான பாடல்களிலும் உன் பாடலின் சாரத்தைக் கேட்போமாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
204 Save us from religious bigotry.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org