W62. குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு. (Whispers from Eternity - Tamil & English)
62. குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.
சாத்துக்குடிப் பழம் நசுக்கப்படினும் அல்லது கடிக்கப்படினும் எப்படி தனது இனிய சாற்றை வழங்கத் தவறுவதில்லையோ, அப்படி நானும் ஒழுக எனக்குக் கற்பி. கருணையின்மையால் துன்புறுத்தப்படினும், கடுமையாக குற்றம்சாட்டப்படினும், கொடியவார்த்தைகளாலும் குரூர செயல்களாலும் அறுபட்டு புண்படினும், என் இனிமை தோய்ந்த அன்பினை இடைவிடாமல் வார்க்க எனக்குக் கற்பி.
சோப்புச் சீவல்களைப் (soap-flakes) போல் நானும் ஆக எனக்குக் கற்பி. அவை நன்கு துவைபட்டு அடிபடினும், அவற்றின் தூய்மைப்படுத்தும் நுரைக்குமிழ்களைத் தருகின்றது. நன்றித் துரோகத்தினால் நான் சோதனைக்குட்பட்டு வெகுவாக அடிபடினும், என் ஞானத்தின் உதவிகொண்டு தூயவெண்ணிற மனப்பாங்கு நுரைக்குமிழ்களை அதற்கு மாறாக நான் வழங்க எனக்குக் கற்றுக்கொடு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
62 Teach me to give Sweet Forgiveness, though crushed by Criticism.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org