W145. என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய். (Whispers from Eternity - Tamil & English)
145. என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.
ராஜாதிராஜனே, சுயக்கட்டுப்பாடு, சாந்தம் எனும் நற்குணங்களைக் பயில்விக்கும் ஒழுக்கக் கலாசாலையில் எனக்கு நீ பயிற்சிகொடு. ஆக்கிரமிக்க முனையும் இருள், பற்று, பேராசைக் கூட்டங்களுக்கு எதிராக நீ, பகவான் கிருஷ்ணரைப் போல, நற்குணங்களுக்குத் தெய்வ நாயகனாயிருந்து போரில் அவைகளை வழிநடத்த வேண்டும். என் மனத்தின் மேலுலக ராஜ்ஜியத்தினுள் வலிமையான தீய படைவீரர்கள் நுழைவதைத் தடுத்து நீ காக்க வேண்டும். உன் சமாதானக் கொடி என் ஆன்ம உயிர்மண்ணில் எப்போதும் தொடர்ந்து பறக்கவேண்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
145 Make me win the battle of life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org