W170. உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.(Whispers from Eternity - Tamil & English)
170. உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.
என் புன்னகை கீதங்களுடன் உன்னிடம் நான் வருகின்றேன். என்னென்ன பொக்கிஷங்கள் என் உள்ளத்தின் ரகசிய சேமநிதியில் உள்ளதோ, அவற்றை உன்னிடம் நான் ஆவலுடன் கொண்டு வந்துள்ளேன். என் இதய தேன்கூட்டிலுள்ள எல்லாத் தேனையும் நான் எடுத்து வந்துள்ளேன். என்னுடையதெல்லாம் உன்னுடையதே!
என் சஞ்சலமான எதிர்பார்ப்புகளும், சந்தோஷங்களும் என்னை அதிருப்தியால் பகலவனாய்ச் சுட்டெரித்துக் கொண்டுள்ளன; இப்போது உன்னைப் பருகுவதனால், என் ஆசைத் தாகங்கள் எல்லாம் நிரந்தரமாகத் தணிந்துவிடும்.
என் சந்தோஷ மெழுகுவர்த்தியின் சுடர் உன் ஆனந்தப் பெருஞ்ஜோதியில் கலந்துவிடும். உன் சுகந்தமான சுடரின் மணமும், பொரிபொரிக்கும் அதன் ஆனந்த தூப அலைகளும் மிதந்து என்னை நோக்கி வருகின்றன. உன் பரமானந்த ஜோதியில், நான் தொடர்ந்து எப்போதும் நீந்துவேன். கானல்-சொர்க்கமான ஒரு லோகாயத உலகில் வாழ்ந்து மடிவதைக் காட்டிலும், உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
170 Teach me to drown in Thy Light and live. (Inspired by a Hindu song.)
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org