MCCRF - A global volunteer network

Holy Kural - 054

54. பொச்சாவாமை - Unforgetfulness




1. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. Worse than wrath in excess is Forgetfulness in joy-excess. V# 531 2. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. Negligence kills renown just as Ceaseless want wisdom destroys. V# 532 3. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. Forgetful nature fails of fame All schools of thinkers say the same. V# 533 4. அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. The fearful find no fortress here The forgetful find good never. V# 534 5. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். Failing foresight the guardless man Shall rue his folly later on. V# 535 6. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare. V# 536 7. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். With cautious care pursue a thing Impossible there is nothing. V# 537 8. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். Do what the wise commend as worth If not, for seven births no mirth. V# 538 9. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. When joy deludes, their fate recall Whom negligence has made to fall. V# 539 10. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். Easy it is a thing to get When the mind on it is set. V# 540

 

Powered by Blogger.