W126. கசகசா பூவிதழ்களுடன் நான் சாந்திதரும் கனவுகாண எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
126. கசகசா பூவிதழ்களுடன் நான் சாந்திதரும் கனவுகாண எனக்குக் கற்பி.
தாகத்தால் வாடும் ஆன்ம-மலர்களுக்கு, நான் வானிலிருந்து மழைத்துளிகளாய் உன் அமிர்த-நாமத்தைத் தாரையாகப் பொழிய எனக்குக் கற்பி. விழிப்புணர்வூட்டும் உன் சாந்தி ஒளியுடனான பொன்மயக் கனவு நல்கும் கசகசா பூவிதழ்களுடன்* நான் கனவுகாண எனக்குக் கற்பி. தெய்வப் பிராணமூச்சே, நீ மனிதர்களில் குறுகிய எல்லைக்குள் இயங்கும் பிராணமூச்சாகவும், எல்லா உயிரினங்களிலும் பரந்துவிரிந்த பிராணனாகவும், என்னுடன் சேர்ந்து வீசு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
---
* - கசகசா பூவிதழ்களுடன் ஏற்படும் கனவு சாந்தி நல்கும் என்பது கனவிற்கு அர்த்தம் சொல்பவர்களின் கூற்று.
---
Original:
126 Teach me to dream Peace with the poppy-petals.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org