Holy Kural - 052
52. தெரிந்து வினையாடல் - Testing and entrusting
1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். Employ the wise who will discern The good and bad and do good turn. V# 511 2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை Let him act who resource swells; Fosters wealth and prevents ills. V# 512 3. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity. V# 513 4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் Though tried and found fit, yet we see Many differ before duty. V# 514 5. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. Wise able men with power invest Not by fondness but by hard test. V# 515 6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் Discern the agent and the deed And just in proper time proceed. V# 516 7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். This work, by this, this man can do Like this entrust the duty due. V# 517 8. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். His fitness for the duty scan Leave him to do the best he can. V# 518 9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick. V# 519 10. நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு Worker straight the world is straight The king must look to this aright. V# 520
Post a Comment