W196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.
196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.
நீளமான, துரதிருஷ்டமெனும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியாக, நெடுங்காலப் பிரிவெனும் மனோராஜ்ஜிய இடைவெளிகளைத் தாண்டி, முடிவற்ற ஜென்மங்களெனும் பந்தயத் தொடர் பாதைகளில் ஓடி, பல லட்சியங்களெனும் படிக்கட்டுக்களைக் கடந்து, பல்வேறு ஆசைகளெனும் வழிகளைப் பின்தொடர்ந்து, சோகமும் இன்பமும் மாறிமாறி வரும் சுழல்பாதைகளிலிருந்து விடுபட்டு - இறுதியில் நான் என் பயணத்தின் முடிவில் நிற்கின்றேன். நான் என் கடந்த அனுபவங்களை இனிமையாக நினைவுகூர்கின்றேன்; ஒவ்வொரு கடந்த காலத்துத் துன்பமும், இப்போது ஒரு இனிமையான ஆனந்தக் கண்ணீரூற்றைத் திறந்துவிடுகின்றது. உன் மேலுள்ள அன்பினால் பரிமளிக்கும் அந்தப் புனிதமான கண்ணீரில், நான் தினமும் ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
196 I baptize myself in the sacred waters of my tears of love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org