Holy Kural - 071
71. குறிப்பறிதல் (பொ) - Divining the mind
1. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world. V# 701 2. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். Take him as God who reads the thought Of another man without a doubt. V# 702 3. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். By sign who scans the sign admit At any cost in cabinet. V# 703 4. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. Untold, he who divines the thought Though same in form is quite apart. V# 704 5. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். Among senses what for is eye If thought by thought one can't descry? V# 705 6. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். What throbs in mind the face reflects Just as mirror nearby objects. V# 706 7. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். Than face what is subtler to tell First if the mind feels well or ill. V# 707 8. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். Just standing in front would suffice For those who read the mind on face. V# 708 9. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். Friend or foe the eyes will show To those who changing outlooks know. V# 709 10. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்ணல்லது இல்லை பிற. The scale of keen discerning minds Is eye and eye that secrets finds. V# 710
Post a Comment