W124. கண்ணீர்சிந்தும் கண்களில் என்னை பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு. (Whispers from Eternity - Tamil & English)
124. கண்ணீர்சிந்தும் கண்களில் என்னை பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு.
என் [ஆன்ம]ஒளிப்பொறி, உன் பேரொளியின் பொறியுடன் கலந்து ஒன்றாகி, அது எல்லாருடைய கண்கள் மூலமும் மினுமினுக்கட்டும்.
நான் ஆன்மாக்களின் கடலில் நீந்த எனக்கு அருள்புரி.
மேன்மையான ஆசைகளெனும் மலைச்சிகர சறுக்குப்பாதையில், என்னை உன்னுடன் இணைந்து சறுக்கச் செய்.
புத்துணர்வுடன் மனங்களில் துளிர்க்கும் எண்ணங்களிலும், முனிவர்களின் அமைதியிலும், உன்னை எனக்கு உணரச் செய்.
கண்ணீர்சிந்தும் கண்களிலே, [அவர்களுக்காகப்] பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக என்னை ஆக்கு.
நீயும் நானுமாகச் சேர்ந்து உணர்வு அலைகளுடன் நடனம்புரிவோம், எல்லா இதயங்களையும், உன் தெய்வீகக் குதூகலத்தால் மகிழ்விப்போம்.
நீயும், நானும் எல்லா ஜீவராசிகளிலும் உயிர்த்துடிப்பாக இருப்போம்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
124 Make me the drops of sympathy in tearful eyes.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org