Holy Kural - 004
4. அறன் வலியுறுத்தல் - The power of virtue
1. சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு From virtue weal and wealth outflow; What greater good can mankind know? V# 31 2. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain. V# 32 3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் Perform good deeds as much you can Always and everywhere, o man! V# 33 4. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற In spotless mind virtue is found And not in show and swelling sound. V# 34 5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech. V# 35 6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை Do good enow; defer it not A deathless aid in death if sought. V# 36 7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை Litter-bearer and rider say Without a word, the fortune's way. V# 37 8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் Like stones that block rebirth and pain Are doing good and good again. V# 38 9. அறத்தான் வருவதே இன்பம்;மற் றெல்லாம் புறத்த புகழும் இல Weal flows only from virtue done The rest is rue and renown gone. V# 39 10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. Worthy act is virtue done Vice is what we ought to shun. V# 40
Send Your Comments to phdsiva@mccrf.org