Holy Kural - 064
64. அமைச்சு - Ministers
1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. He is minister who chooses Right means, time, mode and rare ventures. V# 631 2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. With these he guards people, - by his Knowledge, firmness and manliness. V# 632 3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. A minister cherishes friends Divides foes and the parted blends. V# 633 4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. A minister must sift reflect Select and say surely one fact. V# 634 5. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts. V# 635 6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை. Which subtler brain can stand before The keen in brain with learned love? V# 636 7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். Albeit you know to act from books Act after knowing world's outlooks. V# 637 8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். The man in place must tell the facts Though the ignorant king refutes. V# 638 9. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். Seventy crores of foes are better Than a minister with mind bitter. V# 639 10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். The unresolved, though well designed To fulfil an act they have no mind. V# 640
Send Your Comments to phdsiva@mccrf.org