W192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி (Whispers from Eternity - Tamil & English)
192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி
எனக்கு தூய நலத்தைக் கொடு, ஆனால் என் உடன்பிறந்தவர்களுக்கு அதிக நலத்தைக் கொடு. அதனால், நான் என் விரிவுபெற்ற உள்ளத்தினில் என் மேம்பட்ட நலத்தினால் மகிழ்வேன்.
எனக்கு ஆற்றலைக் கொடு, ஆனால் என் நேசர்களுக்கு அதனை விட அதிகமாய் அள்ளிக் கொடு. அதனால், நான் எல்லா மனங்களின் சக்தியையும் ஒருங்கிணைக்கப்பட்ட என் மனத்தினால் உபயோகிப்பேன்.
எனக்கு ஞானத்தைக் கொடு, அதன் மூலம் என் அன்பர்களை நான் மேன்மையான ஞானியர்களாக்குவேன். அதனால், எல்லையில்லாமல் அகன்று இணைந்த என் சகோதர உள்ளங்களில் விரியும் ஞானஒளிக்கதிர்களை நான் உணர்வேன்.
நான் அனைவருடைய விழிகளினால் காணவும், அனைவருடைய கைகளின் மூலம் செயல்புரியவும், அனைவருடைய இதயத்துடிப்பை உணரவும் எனக்கு கற்றுக் கொடு.
நான் எவ்விதம் எனக்கு செய்துகொள்கிறேனோ, அவ்விதமே நான் அனைவருக்காகவும் நெஞ்சுணர, செயலாற்ற, கடினமாய் உழைக்க, ஊதியம்பெற, குறிப்பாக, செலவிட எனக்கு கற்றுக் கொடு.
எனக்கு ஆரோக்கியம் வேண்டும், எனக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வதற்காக. நான் திறனாளியாக வேண்டும், புவியின் வாசலிலிருந்து திறனின்மையை விரட்டுவதற்காக. எனக்கு ஞானத்தின் சுதந்திரம் வேண்டும், அதனால் நான் என் உரிமையை அனைவரின் ஆன்ம விடுதலையுடன் கூடிய பூரண சுதந்திரத்தில் மட்டுமே மகிழ்ந்து அனுபவிக்க!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
192 Teach me to spend for God's work as I spend for myself
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org