W104. எல்லோரும் என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்கட்டும். (Whispers from Eternity - Tamil & English)
104. எல்லோரும் என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.
உன் அன்பின் தென்றல்காற்று என்னுள் கலந்ததனால், இறைத்தந்தையே, உன் வருகையை எதிர்நோக்கி என் வாழ்க்கை மரமானது மெதுவாக தனது இலைகளை உன்னை வரவேற்பதுபோல் அசைக்கின்றது. என் ஆன்ம இலைகள் தற்சமயம் விழித்துக் கொள்கின்றன. அவைகள் ஒன்றோடொன்று உரசும் சப்தம், காற்றில் மிதந்துவந்து, களைத்து நைந்துபோனவர்களை உன்னிடமிருந்து பெற்ற என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்குமாறு அழைக்கின்றது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
104 Let all rest in the shade of my peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org