Holy Kural - 011
11. செய்ந்நன்றி அறிதல் - Gratitude
1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven. V# 101 2. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. A help rendered in hour of need Though small is greater than the world. V# 102 3. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects. V# 103 4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். Help given though millet- small Knowers count its good palm- tree tall. V# 104 5. உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து A help is not the help's measure It is gainer's worth and pleasure. V# 105 6. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு Forget not friendship of the pure Forsake not timely helpers sure. V# 106 7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears. V# 107 8. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. To forget good turns is not good Good it is over wrong not to brood. V# 108 9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் Let deadly harms be forgotten While remembering one good-turn. V# 109 10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு The virtue-killer may be saved Not benefit-killer who is damned. V# 110
Send Your Comments to phdsiva@mccrf.org