Holy Kural - 090
90. பெரியாரைப்பிழையாமை - Offend not the great
1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாம் தலை. Not to spite the mighty ones Safest safeguard to living brings. V# 891 2. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். To walk unmindful of the great Shall great troubles ceaseless create. V# 892 3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. Heed not and do, if ruin you want Offence against the mighty great. V# 893 4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் The weak who insult men of might Death with their own hands invite. V# 894 5. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். Where can they go and thrive where Pursued by powerful monarch's ire? V# 895 6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். One can escape in fire caught The great who offends escapes not. V# 896 7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். If holy mighty sages frown Stately gifts and stores who can own? V# 897 8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. When hill-like sages are held small The firm on earth lose home and all. V# 898 9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage. V# 899 10. இறந்தமைந்த சார்புடைய ரா யினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். Even mighty aided men shall quail If the enraged holy seers will. V# 900
Send Your Comments to phdsiva@mccrf.org