W199. நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன். (Whispers from Eternity - Tamil & English)
199. நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.
சொர்க்கத்தின் குயிலான நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.
என் பாடல்கள் ஆன்ம-இலைகளின் பசுமை-பொதிந்த நரம்புகளினுள்ளே உன் உயிர்ச்சக்தியைச் செலுத்தி அவைகளைத் துடிப்புடன் அசையவைத்தன. பல நூற்றாண்டுகாலத் தோட்டங்களில், உறங்கும் ஆன்மாக்களை விழிப்புறச்செய்து உன்னிடம் சேர்க்க, உன் பாடல்களைப் பாடியுள்ள குயில் நான்.
நல்லிதயங்களின் தோட்டங்களில் உன் பாடல்களைக் கச்சேரி செய்துகொண்டு நான் பயணிக்கின்றேன். நான் மீண்டும் மீண்டும் வருவேன், வந்து வழிதவறிய கானக்குயில்களைக் கவர்ந்து, உன் பாடல்களைக் கற்றுத்தந்து, உன் பிரபஞ்ச சுதந்திரமெனும் வான்வெளியில் அவர்களுடன் சேர்ந்து நானும் பறப்பதற்காக மீண்டும் வருவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
199 I perched in many trees of lives and sang Thy songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org