W149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.
மாயமோகத்தினாலான இருண்ட காட்டில், நான் பக்தியெனும் நெருப்பைப் பற்றவைத்தேன், ஆனால் புகைமூட்டத்தினால் அதன் தீ வளர்வது தடைப்பட்டது. பின்பு, நீ வந்து சில பலவீனங்களுக்குத் தீ வைத்தாய். உன் நெருப்பு சீக்கிரமாகப் பரவி, என் ஆசைகளெனும் முட்செடிகள், டாம்பீகமெனும் நெட்டையான மரங்கள், முரட்டுத்தனமெனும் அடர்ந்து மண்டிய புதர்கள் என இவையாவற்றின் மீதும் விரிந்தது. என் இருளினாலான முழு காடும் எரிகின்றது; உன் ஒளியை நான் எல்லாத்திசைகளிலும் காண்கின்றேன். இறைத்தந்தையே, உன் உதவிக்கு நான் நன்றிகூர்கின்றேன். நான் அனைவருக்காகவும் ஒளியினாலான பாதையை உருவாக்க விரும்புகின்றேன் - எனக்கு நீ இப்போது உதவியது போல் எப்போதும் உதவு!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
149 Demand to set fire to the forest of darkness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org