W52. எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு. (Whispers from Eternity - Tamil & English)
52. எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.
எங்கள் இதயமொட்டுக்களைச் சிறைப்படுத்தும் இதழ்களைத் திற; எங்கள் சிறைப்பட்ட அன்பின் சுகந்தமணம் உன்னைச் சந்திக்க விரைந்து பரவட்டும். பிரபஞ்ச நோக்கெனும் காற்றினால், எங்கள் சுகந்தமணம் உன் எல்லையற்ற கோயிலுக்குத் தவழ்ந்து செல்லட்டும்.
எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, செம்மையான மேகங்களாலும், அழகு-மிளிரும் மனிதக் கனவுகளாலுமான உன் சாளரக் கதவுகளையெல்லாம் திறந்துவிடு. எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.
இயற்கையின் அனைத்து சாளரங்களுக்கும் பின்னே மறைந்துநிற்கும் உன் கட்புலனாகாப் பாதத்தை வருடுமாறு எங்கள் சுகந்தமணம் வீசவேண்டுமென்பதே எங்கள் ஆசை.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
52 O King of all our ambitions, open the doors of noble aspirations in the mansion of our souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org