W193. உன் சர்வவியாபகப் பேருணர்வே நோயாளிகளில் துன்பப்படுகிறது என்பதைக் காண எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
193. உன் சர்வவியாபகப் பேருணர்வே நோயாளிகளில் துன்பப்படுகிறது என்பதைக் காண எனக்குக் கற்பி.
உன் கருணையையும் ஞானத்தையும் நல்லவிதமாக உபயோகிக்கத் தவறியிருந்தால், நான் ஒரு முடவனாகவோ, தொழுநோயாளனாகவோ, குருடனாகவோ இருந்திருப்பேன் என்பதை உணர எனக்குக் கற்பி; அப்படி ஒருக்கால் நான் முடவனாகவோ குருடனாகவோ ஆவதற்கு பாத்திரமாக இருந்திருந்தால், நான் அவற்றிலிருந்து குணமாக முழுமுனைப்புடன் ஏங்கியிருப்பேன்.
அதனால், முடங்கியோ, சோகத்தால் பீடிக்கப்பட்டோ இருக்கும் மனிதர்களை நான் எப்பொழுதெல்லாம் காண்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் உன் சர்வவியாபகப் பேருணர்வே அந்த மனிதரூபங்களில் துன்பப்படுகிறது என்பதை எனக்கு நன்கு உணரச்செய்; என் உடலில் குடிகொண்டிருக்கும் ஆரோக்கியத்தையும், சாந்தத்தையும் அவர்கள் உடலிலும் பிரதிஷ்டை செய்ய எனக்குக்கற்பி.
பிறருடைய கதறல்கள், ஏக்கங்கள், துன்பங்கள்மேல் நான் பச்சாதாபம் கொள்ள எனக்குக்கற்பி; அதன்மூலம் நான் இவைகளிலிருந்து விடுபட எப்படிப் போராடுவேனோ, அப்படி அவர்களுக்காகவும் போராடுவேன்.
அனைவருக்காகவும் நான் ஏங்கி, போராடி, அழுது, மற்றும் நகைத்து, என் மகத்தான ஆன்மாவை இறுதியில் எல்லோரிலும் காண்பேனாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
193 Teach me to see Thine Omnipresent Spirit suffering in the sick.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org