A1. கடவுள் ஒருவரே!
A1. கடவுள் ஒருவரே!
இறந்தவர்களும், உயிரோடிருப்பவர்களுமென எல்லா மனிதர்களின் ரகசியங்களையும்
யாரறிவார்?
கடவுள் ஒருவரே!
அணுக்கள் தங்கள் கண்களைச் சிமிட்டி, பிரபஞ்சத் தோற்ற நடனத்தினை
ஆடத்துவங்குமுன், யார் நிரந்தர அமைதிவெளியில் அமைந்திருந்தார்?
கடவுள் ஒருவரே!
நாம் எங்கோ ஒரு ரகசியமான லோகத்திலிருந்து இங்கு வந்துள்ளோம், எங்கிருந்து
வந்தோம் என்பதை நாமறியோம்; சிறிதுகாலத்தில் மற்றொரு லோகத்திற்குச்
சென்றுவிடுவோம், எங்கு செல்வோம் என்பதையும் நாமறியோம். இந்த நம் கட்டாயப்
பயணத்தின் காரணத்தை யார் நமக்கு விளக்குவார்?
கடவுள் ஒருவரே!
காரண-காரிய நூல்களினாலே நாம் நம் சிக்கலான வாழ்க்கைக் கிரமத்தினை
நெய்துள்ளோம். தனித்துவத்தன்மையும் சுதந்திர இச்சையும் கோடானுகோடி வகைகளைத்
தோற்றுவிக்கச் செய்கின்றன. அவைகளினூடே தெய்வீகத்துடன் இயைந்திருக்கும் மறைவான
இயைபினை, யார் காணவல்லார்? திகைக்கவைக்கும் எண்ணிலடங்கா விதங்களைக்கொண்ட
மனிதர்களின் ஆக்கபூர்வத் தோற்றங்களை யார் ஒருமித்துச் சேர்த்துக்
கோர்க்கின்றார்?
கடவுள் ஒருவரே!
மறைவான வெட்டவெளிக் கோளங்களிலிருந்து, முடிவில்லாமல் வெளிப்பட்டுக்
கொண்டிருக்கும் ஜீவராசிகளுடைய மாபெரும் அணிவகுப்பின் தோற்றத்தையும், நிறைவையும்
யார் அறிவார்? காலனின் மந்திரக்கோல் தீண்டி, இங்கிருந்து அக்கணமே
மறைந்துவிட்ட எண்ணற்ற பூலோகப் பயணிகள், இப்போது எந்த ஆகாய லோகத்தில்
வசிக்கிறார்கள் என்பதை யார் கூறமுடியும்?
கடவுள் ஒருவரே!
நம் அன்பர்கள் நம்மிடம், "எப்போதும் நான் அன்புடன் இருப்பேன்", என
உறுதியளிப்பார்கள்; ஆயினும், அவர்கள் "பெரும்நித்திரை"யில் ஆழ்ந்து,
அவர்களுடைய பூலோக நினைவுகள் மறைந்தபின்னர், அவர்கள் தந்த உறுதிமொழியினால் என்ன
பயன்? வார்த்தைகளினால் பேசாமல், யார் நம்மை எப்போதும், முக்காலத்திலும்
நேசிக்கின்றார்? மற்றெல்லோரும் நம்மை மறந்தபின்னரும், யார் நம்மை மறக்காமல்
நினைக்கின்றார்? இந்த உலகத்தில் நம் நண்பர்களை நாம் விட்டுவிட்டுச்
சென்றபின்னும், யார் நம்முடன் எப்போதும் துணையாகவே இருப்பார்?
கடவுள் ஒருவரே!
மனிதன் தனது வாழ்க்கைப் பகுதியை நடித்துவிட்டு, மரணக் காட்சி முடிந்ததும்
திரைமறைவிற்குப் பின்சென்று, மறுபடியும் இங்கே, புதிய ஊனுடல்
அலங்காரத்துடன் கால மேடையில் நடிக்கத் திரும்பிவருகிறான். எல்லா மனிதர்களின்
முடிந்துபோன அனைத்து (வாழ்க்கை நாடகப்) பாத்திரங்களையும் யார்
நினைவுகூர்கிறார்? அவர்களின் வருங்கால புதிய பாத்திரங்களை யார் அறிவார்?
மதிமயங்க வைக்கும் ஸம்ஸாரக் காட்டின் தாறுமாறான பாதையில் நிகழும் அவர்களின் பல
ஜென்மப் பகுதிகளிலும், யார் அவர்களை சரியாக ஆட்டுவித்து வழிநடத்திச்
செல்கிறார்?
கடவுள் ஒருவரே!
ஏன் அவர் (கடவுள்) இந்த நாடகத்தை நடத்துகின்றார், ஏன் அவர் இதைப்பற்றிய அறிவை
அவரே வைத்துக்கொண்டு, அரிதாக எப்போதாவது அவரின் குழந்தைகளான நமக்கு அவ்வறிவை
அளிக்கின்றார் என்பது கடவுள் ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
நாம் நம் ஸ்தூல-உடம்பின் மேலுள்ள மோகத்தை அறவே விடும்போது,
பதிலளிக்கவில்லையெனில் விழுங்கும் ஸ்பிங்க்ஸ் வேதாளத்தைப் போலுள்ள இந்த
வாழ்க்கைப் புதிருக்கு விடைகாணுவோம்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
A1. God Alone!
Whispers from Eternity 1959 - Sri Paramhansa Yogananda
(Copy-righted From Self-Realization Fellowship -
Link to the book for purchase
Thanks to Google Translate... (which translated the above in English quite
well, except italicized text)
A1. God Alone!
Who knows the secrets of all men, dead and living?
God Alone!
Before the atoms blinked their eyes and danced the cosmic dance,
who was situated in eternal stillness?
God Alone!
We have come here from some secret world, and we don't know whence we
came; Soon we will go to another world and we don't know where we will
go. Who will explain to us the reason for this forced journey of
ours?
God Alone!
We have woven our complex web of life out of causal
threads. Individuality and free will give birth to a myriad of
species. Who can see through them the hidden love of the
divine? Who will gather together the creative creations of the
bewilderingly myriad forms of human beings?
God Alone!
Who knows the origin and fullness of the great march of beings
endlessly emanating from the hidden ether spheres? Who can tell in which celestial world the countless travelers who
have vanished instantly from here at the touch of Death's magic wand?
God Alone!
Our loved ones promise us, "I will always love you"; However, what is the use of their pledge after they have fallen
into "deep sleep" and their worldly memories have
disappeared? Who loves us forever and ever without words? When everyone else forgets us, who will not forget
us? Even after we leave our friends in this world, who will always be
with us?
God Alone!
Man plays his life part, retreats behind the screen after the
death scene, and returns here again to play on the stage of time
with new costume. Who remembers all the finished (life drama) roles of all
men? Who knows their future new roles? Who guides and steers them right through their many realms of
life that take place in the tortuous path of the mind-numbing
forest of samsara (the cycle of birth and death)?
God Alone!
Why He (God) conducts this drama, why He keeps the knowledge of it
to Himself and rarely gives it to us, His children, is a secret
known only to God!
When we let go of our gross-body obsession, we say goodbye to this
riddle of life, which is like the sphinx that swallows us if we
don't respond correctly.
Tamilization : Paramahamsa Dasan Siva
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment