W152. புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு. (Whispers from Eternity - Tamil & English)
152. புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.
தெய்வகுருவே, என் ஆன்மாவின் நிரந்தர இன்பத்திற்கும், நிலையற்ற
புலனின்பங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிய என்னைப் பழக்கு. என் கண்களை
நன்கு திறந்திருக்கமாறு செய்; அதனால், புலன்கள் கள்ளத்தனமாக ராஜவேஷம் பூண்டு,
கானலில் தோன்றும் நீர் போன்று, புனிதமான இன்பத்தை நிஜம்போலப் பொய்யாகக்காட்டி,
என் வாழ்க்கை மாளிகைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து என்னை ஏமாற்றத்துணிவதைத்
தடுக்கமுடியும்.
விவேகமில்லாமல் தடுமாறும் என் புலன்களை ஒழுக்கப்படுத்து, அதன்மூலம் பளபளவென
மின்னிப் புலன்படும் தோற்ற ஜாலத்தைக் கடந்து, அவைகளினால் ஏற்படும் சுகங்களை
ஆன்மீகமயமாக மாற்றி, எளிமையின் தூய வெண்ணிறத் திரைக்குப்பின்னே மறைந்திருக்கும்
தெய்வீக சுகத்தை அவை எப்போதும் நாடப் பழகட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
152 Teach me not to be deceived by the senses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org