SoHL - TCE 20. How does the matching process work in humans with Free-will?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
TCE 20. How does the matching process work in humans with Free-will?
The Free-will is like a sharp-edged knife. While it can help speed up the evolution process in an unimaginably rapid manner, it can also stagnate the development, almost perpetually, or make it worse.
Due to recursive actions instigated by the free-will and circumstances, the imbalanced human mind develops either positive (attractive or desirable) and negative (repulsive or hateable) forces, termed as “magnets.” These magnets can be of different strengths, from unnoticeably mild strength to apparently visible powerful kind. These magnets and Balance-affecting factors (BAF) affect each other, especially the formidable Attachment BAF, which acts as a brake for the evolution.
Since the evolution must eventually bring humans back to balance, the matching process includes these “neutralizers,” to counter Attachment BAF: 1) removal of something one is strongly attached to (positive magnet) from his/her realm. 2) inclusion of something one hates (negative magnet) in his/her realm. Hate is nothing but the Attachment BAF in negative.
A close observation of one’s mind through introspection will reveal these suggestions, more about which will be discussed in Self-Analysis topic (see TCE 29). Despite the promptings from this matching process and the sufferings resulting from the Imbalanced state, the Free-will, true to its meaning, still allows one to ignore these suggestions and continue as one chooses, for however long it may be so.
TCE 20. சூழ்நிலைகளை நிர்ணயிப்பதில் மனிதனின் சுதந்திர இச்சையின் தாக்கம் என்ன?
சுதந்திர இச்சை (Free-will) என்பது ஒரு கூர்முனைக் கத்தி போல - ஆக்கத்திற்கும் பயன்படும், அழிக்கவும் செய்யும். இந்த சுய இச்சையினால் கற்பனைக்கு எட்டாத வகையில் கூட மன வளர்ச்சியில் ஏற்றம் பெறலாம். இல்லை, அது வளர்ச்சியை தடுத்து தடுமாறவும் செய்யலாம். மாறாக, அதனால் தன் வளர்ச்சிக்கு குந்தகமும் விளைவித்து கொள்ளலாம்.
சூழ்நிலை காரணமாகவோ, தன்னிச்சைப் படியோ தான் செய்யும் செயல்களினால், சமநிலை அற்ற மனித மனம் விருப்பு, வெறுப்பு என்னும் "காந்தங்களை" உருவாக்கிக் கொள்கிறது. செயல் திண்மைக்கு ஏற்ப அவற்றின் காந்த சக்தி கடுகு போல சிறுத்தும், மலை போல பெருத்தும் உருவாகலாம். இந்த காந்தங்கள், முன் பார்த்த மனச்சமநிலை மாற்றிகளுடன் (Balance Affecting Factors - BAF) ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகின்றன. அவற்றில் முக்கியமாக, மனப் பற்று (Attachment - BAF) மன வளர்ச்சியை 'பிரேக்' போல தடை செய்கிறது.
இயற்கை இந்த மனப் பற்றை ஈடு செய்து மனித மனத்தை சமநிலைக்குக் கொண்டு வர, இவ்விரண்டு வழிமுறைகளைக் கையாள்கிறது: 1) எதன் மீது நாம் அதிகப் பற்று வைத்துள்ளோமோ அதனை இழக்கச் செய்கிறது 2) எதனை நாம் மிகவும் வெறுக்கிறோமோ அதனைத் தவிர்க்க முடியா வண்ணம் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. வெறுப்பு என்பது பற்றின் மற்றொரு எதிர்மறையான வடிவமே.
இந்த வழிமுறைகளின் விளைவுகளையும், பொதுவாக எப்படி சூழ்நிலைகள் அமைகிறது என்பதையும், நாம் மனத் தன்னாய்வின் (Self-Analysis) மூலம் கண்டு கொள்ளலாம். மேலும் TCE 29 -ல் பார்க்கவும். என்ன தான் அவதியுறும் சூழ்நிலைகள் இயற்கையினால் நிர்ணயிக்கப் பெற்றாலும், நம் சுதந்திர இச்சையினால் அவற்றின் விளைவுகளை உதாசீனம் செய்துவிட்டு பெயருக்கேற்றாற் போல தன் இஷ்டப்படி இயங்க பூரண உரிமை நமக்கு உள்ளது.
[Prev] [Next] [Section 4] [SoHL Book TOC]
Send Your Comments to phdsiva@mccrf.org