SoHL - TCE 19. What is Self-governance and how does it work?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
TCE 19. What is Self-governance and how does it work?
Self-governance is a simple but crucial checks-and-balance mechanism of the Creation. It works based on the “closed-loop feedback mechanism”, that is similar to the ones used in many machine control systems.
As any creative action involves multiple stages (desire, think, perform – see TCE 9), the governance mechanism in Creation also works in multiple stages. At the top, it starts between Individualized Consciousness’ Balance (as seen in TCE 18) and Free-will (guided-will in life-forms other than humans).
Every Individualized Consciousness (IC) that manifests, in duality-based creation, is in the imbalance state to start with. The action-catalyst factors (ACF – hunger, sleep, death, sex – see TCE 12) prompt Free-will (or guided-will) to act based on the universal instinct: “increase happiness, avoid suffering.” The performed action based on balance-affecting factors (BAF – Scope, Darkness, Attachment - see TCE 18) will either lead towards the Balance in consciousness or continue to be in the imbalanced state (same or worse). This cycle will continue until one is able to dynamically auto-balance (i.e., achieve the target). See Figure 7.
Although the Free-will in humans will no longer allow the evolution to be strictly upward, the matching mechanism still continues to present circumstances (see TCE 15) for humans to evolve taking into consideration of propensities resulting from Free-will coupled with BAFs.
TCE 19. தற்காப்பு நிர்வாகத் திறன் (Self-Governance) என்பது என்ன? அது எவ்வாறு இயங்குகிறது?
தற்காப்பு நிர்வாகத் திறன் என்பது பிரபஞ்சத்தில் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படும் இயக்கங்கள் தறி கெட்டுப் போகாமல் சீருடன் இயங்க வைக்கும் ஒரு அதிமுக்கிய திறன். இதை ஆங்கிலத்தில் "Closed-Loop Feedback Mechanism" (வட்டப் பாதை சுற்றுச் சார்பு இயக்கம்?!) என்று அழைப்பர். இத்திறன் நவீன இயந்திரங்களில் வெகுவாக உபயோகப்படுத்தப் படுகிறது.
நம் உடலில் பல உன்னதமான இயக்கங்களில் இதன் ஆளுமையைக் காணலாம். இயற்கையில் இத்திறன் பல நிலைகளில் செயல்படுகிறது. உச்ச கட்ட நிலையில் அது தன்மை அறிவுணர்வின் சமநிலைக்கும் (Balance), சுதந்திர இச்சைக்கும் (Free-will) நடுவில் செயல்படும் இயக்கத்தை நிர்வாகம் செய்கிறது. பார்க்க படம் - 7 "தற்காப்பு நிர்வாகத் திறன்" (Self-Governance Mechanism).
பொதுவில், சமநிலையற்ற தன்மை உணர்வுள்ள ஜீவராசிகள் முன்பார்த்த படி 'செயலைத் தூண்டும் காரணி'களால் (Action Catalyst Factors - ACF; பார்க்க TCE-12) உந்தப்பட்டு "சுக விருத்தி, துக்க நிவர்த்தி" என்னும் அடிப்படை கொள்கை பிரகாரம் செயலில் ஈடுபடுகிறது. அச்செயல்களின் விளைவு அந்த ஜீவராசியின் 'சமநிலை மாற்றி' (Balance Affecting Factors - BAF; பார்க்க TCE-18) எடைகளைப் பொறுத்து அதன் மனம் சமநிலையை நோக்கி அல்லது சமநிலையில் இருந்து விலகிச் செல்ல காரணமாகும். இப்படி ஒன்றை ஒன்று அனுசரித்து நடக்கும் இந்த இயக்கம், மனம் சமநிலையில் தொடர்ந்து நிலைபெறும் வரை (பிரபஞ்ச லட்சியத்தை அடையும் வரை) ஒன்றையொன்று சார்ந்து இடையறாமல் நடைபெறும்.
மனித இனத்தில் சுதந்திர இச்சையினால் ஏற்படும் பலதரப்பட்ட விளைவுகளுக்கு அதன் சமநிலை மாற்றிகளுக்கு ஏற்ப இயற்கையின் பொதுவான பொருத்தும் முறை (பார்க்க TCE-15) மானிட வளர்ச்சிக்கும் சூழ்நிலைகளை தொடர்ந்து அமைத்துக் கொடுக்கிறது.
[Prev] [Next] [Section 4] [SoHL Book TOC]
Send Your Comments to phdsiva@mccrf.org