SoHL - TCE 17. What is special about human consciousness over other life-forms?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 3: Human Consciousness - பகுதி 3: மனித அறிவுணர்வு
[Prev] [Next] [Section 3] [SoHL Book TOC]
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 3: Human Consciousness - பகுதி 3: மனித அறிவுணர்வு
TCE 17. What is special about human consciousness over other life-forms?
Humans possess advanced capabilities of consciousness, physiologically expressed in the brain, spine, and the nervous system, that the other lifeforms lack.
While the consciousness (also referred as “mind” in humans, commonly) is holistic and cannot be divided into parts, the following classification of four inter-related aspects, indicated in the brackets, with five functions that help us to understand the balancing process involved in the Self-Governance (see Figure 2 for a simple illustration):
- Thinking, abstract reasoning, discriminating intellect (Thought)[1]
- Feeling, sentience, conscientious (Feeling)
- Powering outer interactions, via senses/movements & memory (Power)
- Powering the choice or decision-making, switching, or willing that triggers inner movements (see more about this “Inner Will” in TCE 25)
- Experiencing, identifying or ego, sense of owning, intuition (Bliss)
In human beings, the advanced capabilities in consciousness such as abstract reasoning, discriminating between true or false, intuitive feeling, completely free choice-making power (free-will), ownership in controlling external resources to the extent possible, control the inner will power, and experiencing the most refined form of unlimited Bliss are uniquely special in humans among the life-forms. These equip human beings with the possibilities for endless creativity, self-discovery, and potential to reach the target by self-becoming, in a faster-paced evolution than lower lifeforms.
TCE 17. மனித உணர்வில் மற்ற உயிரினங்களில் உள்ளதை விட அப்படி என்ன சிறப்பு உள்ளது?
உடல் ரீதியான செயல்பாடுகள் குறித்துப் பார்க்கையில், மனிதனின் சிறப்பைக் காணமுடியாது. சில விலங்கினங்கள் மனிதனை விட சிறப்பம்சம் உடையதாக (உ-ம், வேகமாக ஓடுதல், மோப்ப சக்தி, பறத்தல், முதலியன) உள்ளது. ஆனால், மனித உடலமைப்பில் உள்ள மூளை, முதுகுத் தண்டுவடம், நரம்பு மண்டலம் போன்றவற்றின் அளவு, அதிஉன்னதமான செயல்பாடுகள் போன்றவை மற்ற உயிரினங்களில் இல்லாத ஒரு சிறப்பை குறிப்பால் உணர்த்துகிறது. அச்சிறப்பு என்னவென்றால் மனிதனின் வளர்ச்சி பெற்ற தன்மை அறிவுணர்வு (IC4) தான்!
மனிதனின் தன்மை அறிவுணர்வை பொதுவாக 'மனம்' என்றும் கூறுவர். இவ்விரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பினும் அவற்றிற்கிடையே வேறுபாடு உள்ளது. அதை அடுத்த கேள்வி-பதிலில் பார்க்கலாம். இங்கு இரண்டுக்கும் பொதுவாக உள்ள மனிதனின் உணர்வு நிலையில் உள்ள அங்கங்களை ஒரு உதாரணத்துடன் காணலாம்.
பிரபஞ்ச லட்சியத்தை அடையத்தகு பரப்புடைய மனிதனின் தன்மை அறிவுணர்வினை நன்கு புரிந்து கொள்ள, அதனை ஒன்றுக்கொன்று தொடர்புடையதான (overlapping) நான்கு 'அங்கங்களாய்' பிரித்து வகைப் படுத்தலாம். அவையாவன:
1. எண்ண அங்கம் (Thought) - அறிவார்த்தமாக எண்ணுதல், பகுத்தல், வகைப்படுத்தல், அனுமானித்தல், வேறுபடுத்துதல், உண்மை/பொய் எதுவென முடிவெடுத்தல் முதலிய தலை/மூளை பிரதானமாக செய்யும் உள்செயல்கள்.
2. உணர்ச்சி அங்கம் (Feeling) - விழிப்புநிலை உணர்தல், விருப்பு/வெறுப்பு கொள்தல், சுக/துக்கம் அடைதல் முதலிய நெஞ்சம்/இருதய பிரதானமாக செய்யும் உள்செயல்கள்.
3. சக்தி அங்கம் (Power) - உள்ளிருந்து வெளியே, வெளியிலிருந்து உள்ளே என இருவழிகளிலும் உலகத் தொடர்பிற்கு புலன்களை, உடற்பாகங்களை செயல்களில் இயக்குதல், (வலி) பொறுத்தல்/தாங்குதல், ஞாபகம் வைத்தல், கற்பனை செய்தல், முதலியன.
4. ஆனந்த நிலை அல்லது அகங்கார அங்கம் (Bliss or Ego) - வசமாதல், ஒன்றுதல்/பிரிதல், பற்றுதல்/விடுத்தல், மற்ற துணையின்றி தான் உள்ளோம் என உணர்தல், முதலியன. இந்த அங்கம் மனம் சமநிலையில் இருக்கும் போது அது மற்ற அங்கங்களின் துணையின்றி ஆனந்த நிலையிலும், மனம் சமநிலையில் இல்லாத போது (பொதுவாக மனிதன் விழிப்புநிலையில் இருக்கும் நிலை) அகங்கார அங்கமாகமாக மற்ற அங்கங்களைச் சார்ந்தும் இருக்கும். இச்சார்பு பற்றி மேலும், 'அகங்கார பரப்பு' - Scope of Ego விஷயத்தில் பின்னர் விவரிக்கப்படும்.
இந்த படத்தில் (படம் 2: மனித மனதின் நான்கு அங்கங்கள் - Human Mind's Four Aspects) உள்ள எளிய உதாரணத்தின் மூலம் இந்நான்கு அங்கங்களின் தொடர்பையும், வேறுபாட்டையும் புரிந்து கொள்ள முடியும்.
ஒருவர் குதிரையைப் பார்க்கும் போது அவரின்:
- சக்தியங்கம், "நான் பழுப்பு நிறமுள்ள ஒரு குதிரையைக் காண்கிறேன்" என்ற தகவலை உள்ளே செலுத்தும்.
- எண்ண அங்கம், "இந்த குதிரை சவாரி செய்வதற்குத் தயாரான உபகரணங்களுடன் உள்ளது" என தகவலைப் பகுத்து, அனுமானித்து, அறிந்து கொள்ளும்.
- அகங்கார அங்கம், "இது என் குதிரை" என அது தன்வசம் உள்ளதை உறுதி செய்யும்.
- உணர்ச்சியங்கம், "நான் இந்த குதிரையில் சவாரி செய்வதில் இன்பம் அடைவேன்" என உணர்த்தும்.
மேற்கண்ட வரிசைப்பாடு போல் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்போதும் நடக்கும் என அவசியம் இல்லை. இந்த வரிசைப்பாடு எளிமையாகப் புரிந்து கொள்ள கொடுக்கப்பட்ட ஒரு உதாரணம். இந்த வரிசைப்பாடு வேறு விதமாகவும், தலைகீழாக மாறியும் நடக்கலாம். அது அங்கங்களுக்கு இடையே உள்ள நெருங்கிய, பின்னிப்பிணைந்த தொடர்பைக் காட்டுகிறது.
[Prev] [Next] [Section 3] [SoHL Book TOC]
[1] In Vedanta, Buddhi is equivalent to Thought aspect, Chitta to Feeling aspect, Manas to (Sensory) Power aspect, and Ahamkar to Ego/Bliss aspect.
Send Your Comments to phdsiva@mccrf.org