MCCRF - A global volunteer network

SoHL - TCE 16. Is it possible to prove this theory: life-form transitions, matching process, etc.?

The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி

TCE 16. Is it possible to prove this theory: life-form transitions, matching process, etc.?
As mentioned before, through the analogies, many of the concepts in this theory have been emulated already but in silos that can be integrated to provide a simulation as close as possible to a manageable set of variables. That said, despite having a theoretical model which can be simulated using computers, there is no logical possibility to prove the workings of the transition from one life-form to another. No other theory including Darwin’s has even explained this. A lower IC global-type life-form cannot comprehend the workings of the higher IC type. No human being, being the part of the whole creation, cannot logically comprehend the workings of the matching process that requires considering potentially every other ICs in the collective whole creation. However, even with that inexplicability, this theory does provide an opportunity to test and prove the workings of evolution and the matching process using human consciousness capabilities, which will be covered in Section 6: Quickening Evolution.
The most important use of this evolutionary model is that it provides the basis and framework for self-analysis (see TCE 29) for finding root causes for one’s own problems and also help address others problems where the causative factors for the problem are within their control. In addition, this framework opens up the possibility to solve the root-cause issues rather than applying remedial fix based on the symptoms in several other areas: self-development, parenting, counseling, dispute resolution, health care – particularly for cancer, incurable diseases, auto-immune diseases, geriatrics, etc. – and many more[1].

TCE 16. இந்நூலில் உள்ள நுட்பக் கருத்துக்களான ஒன்றிலிருந்து மற்றொரு ஜீவராசியில் வளர்மாற்றம், சூழ்நிலைக்கேற்ப பொருத்தும் முறை போன்றவற்றை நிரூபணம் செய்ய முடியுமா?
முன்னர் இந்நூலில் அவ்வப்போது உதாரணங்களில் சுட்டிக் காட்டியது போல், இக்கருத்துக்கள் தற்கால மனித வாழ்க்கையில் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் செயலாக்கப் பட்டுள்ளது. முக்கியமாக, கம்ப்யூட்டர் துணைகொண்டு இந்த கருத்துக்களை ஒருங்கிணைத்து மேலும் சிறப்பாக 'மாதிரி வடிவமைப்பு'களை (computerized models) உருவாக்க முடியும்.
ஆயினும், ஜீவராசிகளுக்கிடையே வளர்மாற்றம், பிரபஞ்ச நோக்கம், தோற்றுவாய் முதலியன மனிதனால் யூகிக்க முடியுமே ஒழிய நிரூபணம் செய்வது சாத்தியம் அன்று. ஏனென்றால், அறிவுணர்வில் தன்னை விட மேல்நிலையில் உள்ள ஒன்றின் செயலை தன்னால் சுயமாக முழுதும் அறிந்து செயல்படுத்த முடியாது. அது போல, இப்பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் செயல்களான இவைகள் அதனின் ஒரு சிறு பகுதியான மனித அறிவுக்கு முழுதும் எட்டுவது சாத்தியம் ஆகாது. பரிணாம வளர்ச்சியைப் பற்றிய டார்வின் தியரி கூட ஜீவராசிகளுக்கிடையே வளர்மாற்றம் குறித்து போதிய விளக்கம் தரவில்லை.
இருந்த போதிலும், இக்கருத்துக்களில் உள்ள சில பகுதிகளை மனித அறிவினால் அறிந்து கொண்டு அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள இந்நூல் வழி காட்டுகிறது. விரிவாக பகுதி 6 -ல் காணலாம். அதில், குறிப்பாக தன்னிலை ஆராய்ச்சி (self-analysis) மூலமாக ஒருவரின் எல்லைக்குள் நிகழும் நிகழ்வுகளை ஆராய்ந்து, பிரச்சினைகளின் மூலகாரணம், அதன் வடிவம், மற்ற பிரச்சினைகளுடன் தொடர்பு, செயல்பாடு  போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டு, அவற்றிற்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறை இந்நூலில் அடிப்படை கொள்கைகளுடன் விளக்கப் பட்டுள்ளது.
இது வரை விஞ்ஞான ரீதியாக அணுகப்படாத சுய  முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, மன வள ஆலோசனைகள், சிக்கலான உறவுப் பிரச்சினைகள் போன்ற துறைகளிலும், அலோபதி மருத்துவ ரீதியாக இதுவரையில் 'தீர்க்க முடியாத' நோய்கள், கேன்சர், டயபடீஸ், முதியோர் நலம், போன்றவற்றிற்கும் இந்நூல் புது மாற்றுச் சிந்தனை உபாயங்களைக் கொடுக்கும் என்பது ஆசிரியரின் திண்ணம்.


[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]

[1] Visit www.mccrf.org  (MIND CORRUPTION CURE RESEARCH FELLOWSHIP) for more discussion on it. 
Powered by Blogger.