SoHL - TCE 15. How does Individualized Consciousness evolve from one life-form to another?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Through Individualized Consciousness’ own Self-Governance mechanism, every Life-force type IC2 or above prompts to manifest in a life-form based on the matching circumstances in order to evolve higher. After manifesting in a life-form, it evolves continuously based on the new circumstances during that lifespan, except in restful state (or deep sleep in humans), until the death of the life-form. In the lower life-forms with short lifespans, the transition of IC from another life-form should be seamless, since there are less number of variables to match and more chances for suitable circumstances would be available for it to manifest and evolve. As the consciousness evolves to higher IC global-types where the expressing life-forms that are made up of multi-billion or trillion cells, the process for finding the matching circumstances with many different ICs becomes complex and an IC may manifest partially with the optimal circumstances. With human free-will, the complexity increases exponentially with many other ICs involved for the matching process. However, the process remains the same [1].
Putting it all together, the entire Creation platform, as a whole composed of limitless ICs, acts like an “Infinite variables State Machine”[2]making the matches for every IC, every moment based on its need in order to evolve further.
The closest analogy I found for the above process is in the Computer Operating System (e.g., Windows or Linux) managing multiple processes or applications within its control. The matching process is very similar “Online Target Advertising” that is done by companies like Google, Facebook, etc. based on what user needs, based on the data collected from the movements that user made online.
TCE 15. எப்படி தன்மை அறிவுணர்வு ஒரு ஜீவராசியில் இருந்து மற்றொரு ஜீவராசிக்கு வளர்ச்சி பெறுகின்றது?
தன்மை அறிவுணர்வு கொண்ட எந்த ஒரு ஜீவராசியும் (IC2-வும், அதற்கு மேல் உள்ளனவும்) தனது சொந்த தற்காத்து நிர்வகிக்கும் திறனினால் (Self-Governance) தன் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைகளைப் பொறுத்து அதற்குத் தக்க ஜீவராசியில் தோன்றுகிறது.
தோன்றிய பின்னும் அதன் இறுதி வரை, முழு ஓய்வு நேரங்களைத் (மனிதர்களில் ஆழ்ந்த தூக்க நிலை) தவிர, அந்த ஜீவராசியில் தன்மை அறிவுணர்வு புதுப்புது சூழ்நிலைகளால் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெறுகிறது.
நுண்ணுயிர் போன்ற கீழ்நிலை IC கட்டத்தில் உள்ள ஜீவராசிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வளர்தல் மிகுந்த வேறுபாடுகள் இன்றி கணிக்கத் தக்க வகையில் சீராக நடக்கிறது. ஏனென்றால், கீழ்நிலை IC கட்டத்தில் குறைந்த அளவு 'மாறி'கள் (variables) பங்குபெறுவதால், அதிகபட்ச அளவு சூழ்நிலைகளில் அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு கிடைக்கின்றது.
தன்மை அறிவுணர்வு IC வளர வளர அதற்கேற்ப மாறிகளும் பெருக, ஜீவராசியின் மாற்றம் மனித கணிப்புக்கு ஏற்ப நடப்பதில்லை. மேலும், ஒரு IC முழுமையாகப் பரிமளிக்கத் தக்க சூழ்நிலை கிடைக்கவில்லை என்றால், கிடைத்த சூழ்நிலையில் சிறப்பானதைப் பொறுத்து பல ஜீவராசிகளில் சிறுகூறுகளாய்ப் பிரிந்தும் வளர்வடைவது சாத்தியம் ஆகிறது. மனிதனின் சுதந்திர இச்சையினால் உண்டாகும் உறவு, சூழ்நிலை மாற்றங்கள், இந்த ஜீவராசி மாற்றத்திற்காக பொருத்தும் மாறிகளை எண்ணமுடியாத அளவு பெருக்கி விடுகின்றது. இருந்த போதிலும், மேற்கூறிய செயல்முறைப் படி பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகின்றது.
பல்வேறு தன்மை அறிவுணர்வு கொண்ட ஜீவராசிகள் வளர்ச்சிக்கு நிலைக்களனாக இருக்கும் இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற மாறிகளின் நிலைகளைக் கணக்கில் கொண்டு சமன்படுத்தும் ஒரு மெஷின் போல இடையறாமல் இயங்குகிறது (Infinite Variable State Machine).
இவ்வியக்கம், ஒரு குறிப்பிட்ட வரையறையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (operating system) செயலை ஒத்துள்ளது. மேலும், பிரபஞ்சத்தின் சூழலுக்கேற்ப பொருத்தும் முறை, 'பேஸ்புக்' (Facebook), 'கூகிள்' (Google) போன்றவற்றின் 'ஆன்லைன் அட்வெர்டைசிங்' (Online Advertising) நம் இணைய தள செயல்கள், தேவைகளுக்கு ஏற்ப பொருத்தும் முறைக்கு ஏகதேசமாக ஒத்துள்ளது.
[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]
[1] Resembles aspects of the highly influential and controversial Karma and Reincarnation concepts of Hindu origin. However, a vast number of interpretations, misunderstandings, fatalistic beliefs, superstitions, blames, incorrect applications, etc. in them make it harder to subject them to any meaningful analysis. The transition of life-forms one to another is beyond human comprehension, hence not covered in this theory. Undue attention to the life-form transition and even research studies of Near-Death or After-Death Experiences is of little practical value as long as the chasm of death confronts us.
[2] Samarasya Parayana in Hinduism.
Send Your Comments to phdsiva@mccrf.org