MCCRF - A global volunteer network

SoHL - TCE 13. What is Consciousness Evolution?

The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி

TCE 13. What is Consciousness Evolution?
Every life form, from a single-celled organism to the complex multi-trillion celled human beings and other animals, is conscious and evolves based on two fundamental instincts: self-preservation and self-expansion. Combining these two instincts together, it can be said as the universal driver for action is: increase happiness (or comfort) and avoid pain (or suffering)[1]. This evolution for every life-form is a continuous process, controlled by Self-Governance until it reaches the target by self-becoming. The manifestation (or instantiation) and the duration or lifespan of the life-form are decided based on the matching circumstances available in order to evolve further and dictated by Self-Governance. The positive (progeny, rest) and negative (hunger, fear) catalyst factors (ACF) fuel the evolution process. The evolution of life-forms continues upward until to the point where their consciousness capabilities sufficiently develop as expressed in human beings. With free-will and other advanced capabilities, the evolution no longer remains upward, however, the Self-Governance process and the drivers for action continue to operate in the same manner.
TCE 13. அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன?
நுண்ணுயிர் முதல் மனிதன் வரை எல்லா ஜீவராசிகளும் உணர்வு உடையவை. அவை இரண்டு அடிப்படை தத்துவங்களால் பரிணாம வளர்ச்சி அடைகிறது. அவை 'தன்னைக் காத்துக்கொள்ளல்' (self-preservation) , 'தன்னை விருத்தி செய்து கொள்ளல்' (self-expansion) என்பன. இவ்விரண்டும் செயலின் அடிப்படையில் பார்க்கும் போது, ஜீவராசி தன் 'சுகத்தை விருத்தியும், துக்கத்தை நிவர்த்தியும் செய்து கொள்ளல்' என்னும் ஒரே கொள்கைக்குள் அடங்கும்.
 இந்த வளர்ச்சி ஒவ்வொரு ஜீவராசியும் பிரபஞ்ச லட்சியம் அடையும் வரை, அதனதன் 'தற்காத்து நிர்வகிக்கும் திறன்' (Self-Goverance) பிரகாரம், தொடர்ந்து நடைபெறும். ஜீவராசியின் தோற்றம், மறைவு முதலியன அதன் நிலையில் இருந்து மேல்நோக்கி வளர ஏதுவாக இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். இடைப்பட்ட ஜீவராசி வாழும் காலத்தில் கூட சூழ்நிலைகள் அது போலவே மேல்நோக்குமுக வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 
செயலைத் தூண்டும் காரணிகளான (ACF) பசி, உறக்கம், உடற் புணர்ச்சி போன்றவை ஜீவராசியை செயலில் இறக்கி பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து நடைபெற உதவுகிறது.
மனிதனைத் தவிர்த்து, மற்ற நுண்ணியிர் முதல் விலங்கினங்கள் வரை வளர்ச்சி ஒரே செங்குத்தாக மேல்முகமாக உள்ளது. மனிதனின் சுதந்திர தன்னிச்சை (free-will) திறத்தினால் வளர்ச்சி நேர்கோட்டில் மேலேறிச் செல்வது மாறுபடுகிறது. ஆறறிவு கொண்ட மனிதனின் வளர்ச்சி ஏறுமுகமாக வளரவும், இறங்குமுகமாக சறுக்கவும், இல்லை ஒரே நிலையில் சுற்றிக் கொண்டு இருக்கவும் இந்த தன்னிச்சையானது தற்காத்து நிர்வகிக்கும் திறனுடன் சேர்ந்து வழி வகுக்கிறது. விரிவைப் பின்னர் பல இடங்களில் காணலாம். 


[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]

[1] Sukha pravritti dukha nivritti, in Vedanta
Powered by Blogger.