SoHL - TCE 12. Am I free to choose to abstain from the action?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
TCE 12. Am I free to choose to abstain from the action?
Every human being is free, has equal opportunity and access to natural resources, from the Creation’s point of view, however, they are not entirely free to abstain from actions. The avoidance factors, such as the threat of hunger and fear of death (negative factors), and the enjoyment factors, in the form of sex or in having comfortable sleep or rest (positive factors), act as catalysts for action. These are called “Action-Catalyst Factors (ACF)” and they apply not only to human beings but some extent to other life-forms, depending on the capabilities. The Natural evolution, according to Darwin, could have addressed these factors differently, say for example, similar to mitochondria acquisition in an animal cell[1], if the animal cell had acquired the chloroplast, the animals could have eliminated the need to depend on plants for energy. Another example is: as in certain plants if animals happened to be unisexual, one would have been able to produce progeny instead of the sexual act between male-female gender. However, from what we know, the Natural evolution did not solve these survivability needs. As will be discussed further, these factors are overarching and provide the basis for the very evolution itself!
TCE 12. நான் எந்த செயலையும் செய்யாமல் இருக்க எனக்கு சுதந்திரம் உண்டா?
இயற்கை வளங்களைக் கண்டு கொள்வதிலும், அவைகளை சுதந்திரமாகப் பயன்படுத்துவதிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் (ஜீவராசிக்கும்) சமவாய்ப்பு உள்ளது. ஆனால், இயற்கை அவற்றிற்கு செயல் செய்யாமல் இருக்க சுதந்திரத்தை வழங்கவில்லை.
பசி, மரணபயம் என்ற தவிர்க்கத் தூண்டும் காரணிகளாலும், உடலுறவு, உறக்கம் என்ற வேண்டத் தூண்டும் காரணிகளாலும் இயற்கை எல்லாவற்றையும் செயல் செய்யத் தூண்டுகிறது. இக்காரணிகள் 'செயலைத் தூண்டும் காரணிகள்' ('Action Catalyst Factors" or ACF) என இந்நூலில் குறிக்கப்படுகிறது.
விஞ்ஞான வட்டாரத்தில் ஏகதேசமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 'டார்வின் தியரி' (Darwin's theory of Natural Evolution) பிரகாரம் இயற்கை வளர்ச்சியை பற்றி சற்று சிந்தித்து, ஒரு சில மாற்று யோசனைகளைப் (what-if scenarios) பார்ப்போம்:
மனிதன் உள்பட விலங்கினங்களும் தாவரங்களைப் போல் சூரிய ஒளியில் இருந்து தனக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கலாம். இது பசியின் கவலையைப் போக்கியிருக்கும்.
மனிதன் உள்பட விலங்கினங்களும் சில தாவரங்களைப் போல் ஒருபால் (unisex) வர்க்கமாக இருந்து, தன் சந்ததிகளை உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கலாம். இது உடற்பசியின் தூண்டுதலை ஒழித்திருக்கும்.
இப்படி நடக்காமல் இயற்கை இத்தேவைகளை விட்டு வைக்கக் காரணம், மேற்கண்ட காரணிகள் பரிணாம வளர்ச்சிக்கே அஸ்திவாரம் போல் அமையும் செயல்களைச் செய்யத் தூண்டும் காரணத்தினால் தான்! மேலும், அடுத்த கேள்வி பதிலில் பார்ப்போம்.
[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]
[1] Popular hypothesis in the scientific community is that, sometime in the distant past, the “predatory” animal cell acquired the mitochondrion bacteria cell for energy and evolved as the animal cell, that we know now, in a symbiotic relationship. Similarly, “predatory” plant cell acquired the chloroplast cell to become what it is now.
Post a Comment