MCCRF - A global volunteer network

SoHL - TCE 11. Why does the action determination have to be this complex?

The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி

TCE 11. Why does the action determination have to be this complex?
There are few reasons: First, as stated in the target criteria, one must be fully aware in order to experience the ultimate Bliss. If one, who is not yet fully aware, knows the type of action (positive or negative) beforehand, then he/she may not even attempt to do any action that preempts the possibility for generating new Bliss (i.e., violates the basis for creation). Another reason is that in order to progress towards the target, one must first be able to perform positive actions and avoid negative actions, consistently. Then only, one will become fit for transcending both types of action altogether, which is necessary for reaching the target.  That discriminative learning can take place only by contrasts. Another important reason is that there cannot be anything in creation that is unknown to the part when it reaches the target of Absolute Freedom. Otherwise, the part may be subjected to relative creation again in order to know the previous “unknown”, which defeats the purpose achieving Absolute Freedom, in the first place. The creation’s design suggests that each part will have an opportunity to exercise all possible creative combinations, either positive or negative, that the collective whole could ever try out. Humans, among all the known species of the world, happens to possess this unique capability in the form of free-will (choice making) along with other advanced consciousness capabilities.
TCE 11. செயலின் தன்மையை நிர்ணயம் செய்ய ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது?
முன்னர்க் கூறிய பிரபஞ்ச நோக்கத்தை அனுசரித்து 3 காரணங்களைக் கூறலாம்.
1) மனிதனின் லட்சியமான பரிபூரண ஆனந்தத்தை அனுபவிக்க முழு அறிவுணர்வு தேவை. ஒருவர் அறிவுணர்வு முழுமை பெறுமுன்னர்முன்கூட்டியே ஒரு செயலின் தன்மை தெரிந்து விட்டால் அவருக்கு எந்த ஒரு செயலைச் செய்ய முனைவதிலும் ஆர்வம் குன்றி விடும். அப்படியானால், மனிதர்கள் லட்சியத்தை நோக்கி முன்னேற முடியாமல், இடைப்பட்ட திரிசங்கு நிலையில் மாட்டிக் கொண்டு விடுவர். அது பிரபஞ்ச நோக்கத்திற்கு மாறானது.
உதாரணமாக, சுயஉழைப்பில் சம்பாதித்த செல்வந்தர் ஒருவர் தன் பிள்ளையின் தகுதி, வளர்ச்சியை பற்றிக் கவலைப் படாமல் தன் செல்வத்தை பிள்ளைக்கு முன்னமே அளித்தால், பிள்ளைக்கு தான் முன்னேற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல், ஊதாரித்தனத்தில் கொண்டு போய் விடும். அது போல.
2) லட்சியத்தை நோக்கி முன்னேற, ஒருவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து நெகடிவ் செயலை விடுத்து, பாசிட்டிவ் செயலைச் செய்தல் அவசியம்.  அப்பொழுது தான் இருவகைச் செயல்களையும் கடந்து, பரிபூரண ஆனந்தம் அடையும் லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும். அந்த செயல்களின் தன்மையை சீர்தூக்கிப் பார்க்கும் விவேகம் அவற்றின் வேறுபாட்டால் அதனதன் விளைவுகளை அனுபவித்த பின்னர் மட்டுமே கற்க முடியும். (உ-ம். நிழலின் அருமை வெயிலிலே தெரியும்).
3) இது சற்று மண்டையைக் குடையும் காரணம், ஆனால் முக்கியமான ஒன்று! தோற்றுவிக்கப்பட்ட ஒரு பகுதி (part) முழுமை (whole) லட்சியத்தை அடையும் போது, அப்பகுதி  பூரண சுதந்திரம் பெற்றாக வேண்டும்.  லட்சியத்தை அடையும் போது, அப்பகுதிக்கு ஏதாவது ஒரு குறை (உ-ம். 'இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் அனுபவிக்கவில்லையே, செய்யவில்லையே' என்ற வகையில்) இருந்தால் அப்பகுதி திரும்ப பிரபஞ்ச இயற்கையின் வசத்துக்கு ஆட்பட வேண்டி வரும். அது லட்சியத்தை முன்னர் அடைந்ததன்  பயனையே பூஜ்யமாக்கி விடும். ஒவ்வொரு பகுதியும் பிரபஞ்சத்தில் செய்ய முடிகிற எந்த ஒரு செயலாய் இருந்தாலும், அது  பாசிட்டிவோ, நெகடிவோ, அதை தன்னிச்சைப் படி செய்து அனுபவிக்கும் வகையில் இப்பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அமைந்துள்ளது.

இவ்வுலகத்தில் மனிதன் கண்டறிந்த ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே இந்த தன்னிச்சை (சுய விருப்பம், சுதந்திர விருப்பம், free-will) பூரணமாக உள்ளதாக அறிகிறோம். இதன் விரிவை இந்நூலில் பல இடங்களில் பின்னர்க் காணலாம்.

[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]

Powered by Blogger.