MCCRF - A global volunteer network

SoHL - TCE 10. How does one know if an action is positive or negative?

The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி

TCE 10. How does one know if an action is positive or negative?
If an action is positive or negative can be known only based on the result, and will not be possible to know before commencing the action. Also, importantly, due to the dynamic nature of the Creation, an action that yielded positive result at one point, when it is performed at another time, another place, or with different people or things involved, the repeated action may not be guaranteed to produce the positive result in the same measure, as before. Nevertheless, by convention, an action is considered as positive or negative indirectly based on the positive or negative results it yields in most of the circumstances. This is a challenge that every individual is facing where no convention, organization, or tradition can set universal rules that hold true always. There cannot be objective measures, when humans are involved, that is guaranteed to work for everyone, even though it works for the majority. Later in the book, we will see how this challenge can be met successfully.
TCE 10. எப்படி ஒரு செயல் பாஸிடிவ் அல்லது நெகடிவ் என தெரிந்து கொள்வது?
ஒரு செயலின் தன்மையைச்செயலைச்  செய்து முடிக்கப்பட்ட பின்னர் தான் நிர்ணயிக்க முடியும். அது மட்டுமல்ல, மாறும் தன்மையைக் கொண்ட பிரபஞ்சத்தில் முன்னர் செய்த செயலைத் திரும்பவும் இடம், காலம், அதில் உபயோகப்படும் பொருட்கள், முறைகள், ஈடுபடும் மனிதர்கள் என இவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றி செய்தால், முன்னர் ஏற்பட்ட விளைவு மறுபடியும் அதே போல் விளையும் என உறுதியாகக் கூற முடியாது.
பொதுவாக, ஒரு சமுதாயத்தில் ஏற்கனவே வழங்கி வரும் செயல்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைக் பொறுத்து இன்ன செயல் பாஸிடிவ் அல்லது நெகடிவ் என கருதப்பட்டு வருகிறது. 
செயலின் தன்மையை இவ்வாறு நிர்ணயித்து ஒரு குழுவோ, நிறுவனமோ, எந்திரமோ, சமுதாயமோ, நாடோ, ஆட்சியோ சட்டம் இயற்றி  எல்லா மனிதர்களுக்கும், உலகெங்கும், எல்லா காலங்களுக்கும் பொருந்தும்படி செய்வது, செய்து கண்காணிப்பது என்பது முடியாத காரியம். ஏனென்றால், பெரும்பான்மையைப் பொறுத்த நிர்ணயம்  வெளிமுகமாக அளக்க முடிந்த விஷயங்களில் (objective measures) மட்டும் தான் உபயோகப்படும். மனிதன் (மனம்) சம்பந்தப்பட்ட செயல்களில் பெரும்பான்மை நிர்ணயம் மட்டும் செயலின் தன்மையை நிர்ணயம் செய்யப் போதாது.

இப்படி செயலின் தன்மையை நிர்ணயிப்பதில் உள்ள சிக்கல் ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை விடுக்கும் அந்தரங்கச் சவால். இந்த சிக்கலான சவாலை எப்படி அணுகுவது என்பதைப் பற்றிப் பின்னர் (குறிப்பாக TCE 25, 29, 36-ல்) விரிவாகக் காணலாம்.
    
[Prev] [Next] [Section 2] [SoHL Book TOC]

Powered by Blogger.