SoHL - TCE 09. What is self-transcendence?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 2: Consciousness Evolution - பகுதி 2: அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
TCE 9. What is self-transcendence?
Any creative action is an expenditure of energy[1]. It expends the energy in three stages: desire to act, thinking or planning about the action, and performing the action[2]. If the intended result of an action aligns with achieving the target for oneself and for others, it is considered a positive action[3], the opposite is a negative action. If the intended result of a positive action (i.e., loss of spent energy) ended up in a loss, short-coming, or failure and if that does not deter one from further action, one is self-transcendent with respect to that action.
TCE 9. 'தன்னிலை கடப்பது' (self-transcendence) என்றால் என்ன?
நாம் சுயமாகச் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் நம்மிடம் இருந்து சக்தி செலவாகிறது. அந்த சக்தி: 1) செயலைச் செய்ய விரும்புதல், 2) செயலைப் பற்றி சிந்தித்தல், 3) செயலைச் செய்தல் என மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது.
செயலினால் நாம் விரும்பிய விளைவு (result) நமக்கோ, பிறருக்கோ லட்சியத்தை நோக்கிச் செல்ல பயன்பட்டால் அது ‘பாசிடிவ்’ (positive) அல்லது 'பொருந்தும்' செயல் எனப்படும். அதற்கு எதிர்மறையான (அதாவது, லட்சியத்தை விட்டு விலகிச் செல்லும்) விளைவு உண்டானால் அது ‘நெகடிவ்’ (negative) அல்லது 'பொருந்தா' செயல் எனப்படும்.
ஒரு பாசிடிவ் செயலைச் செய்து முடித்த பின் எதிர்பார்த்த விளைவு கிடைக்காமலோ, இல்லை அந்த செயல் அரைகுறையாகவோ, நஷ்டத்திலோ முடிவுற்றால், அந்த செயலைச் செய்தவர் நிலை குலையாமல் திரும்ப அப்படிப்பட்ட செயலை அல்லது மற்றொரு பாசிடிவ் செயலை செய்ய முற்பட்டால், அவர் அந்த செயலைப் பொறுத்தவரை 'தன்னிலை கடந்தவர்' என்று அர்த்தமாகும்.
Post a Comment