SoHL - TCE 08. Is Creation a random, purposeless, “fun play”?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 8. Is Creation a random, purposeless, “fun play”?
Although the complexity in creation is bewildering and, in some contexts, appears like a hide & seek game[1], a deeply thoughtful design (see PL 1 & PL 3: mathematical accuracy, order, interdependency, etc.) behind everything in creation and the Self-governance mechanisms, discussed later in TCE, indicate that the Creation was not made as a random trick or a pointless fun play. It can, however, be said as an “Investment” for productivity that results in the gain of ever-expansive Bliss, which is the finest form of happiness and fun.
TCE 8. உலகம் என்பது லட்சியமில்லாமல், கண்டபடி மனம் போன போக்கில் வாழ்ந்து மகிழ அமைந்த விளையாட்டு மைதானமா?
எண்ணிலடங்கா விதங்களால் ஆன பரந்து விரிந்த இயற்கை உலகை ஆராயத் தொடங்கினால், ஒன்றைப் பற்ற மற்றொன்று விரிகிறது. இப்படி சில சூழல்களில், பிரபஞ்ச வாழ்க்கை என்பது ஒரு 'கண்ணாமூச்சி விளையாட்டோ?' என்று கூட நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.
நவயுக விஞ்ஞானிகள் சிலர் இவ்வுலகம் இயற்கையான வளர்ச்சியால், கண்டபடி நடந்த பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் (random collision, mutation) தோன்றியுள்ளது. மனம், உணர்வு போன்ற சூட்சுமமான விஷயங்கள் கூட அப்படியே தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வெளியிடுகிறார்கள். மனித நேயம், வாழ்வின் லட்சியம் போன்றவைகளை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
ஆனால், மனித அறிவுக்கு எட்டிய வரை பார்த்தால், அணுவிலிருந்து கோளங்கள் (planets) வரை அவற்றின் இயக்கங்கள் துல்லியமான கணித கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன. இயற்கையில் நுண்ணிய கிருமிகள், தாவரங்கள், விலங்குகள் என ஜீவராசிகள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படும் விதம் பிரமிக்கத் தக்கதாய் உள்ளது. மனித உடல் அமைப்பு, மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடு ஒரு சிறந்த வேலைப்பாடுள்ள எஞ்சின் போல இயங்குகின்றது. ஜீவராசிகளின் அசாத்தியமான தற்காத்து நிர்வகிக்கும் திறன் (Self-Governance) போன்றவைகளைக் காணும் போது, 'இவ்வுலகம் யதேச்சையாக உருவான (random) ஒன்று' என்னும் கருத்தை ஏற்க மனம் இடம் கொடுப்பதில்லை. தவிர, 'ஒரு சாரமற்ற, சாதாரண கேலிக்கூத்துக்கு எதற்கு பிரபஞ்சம் இவ்வளவு மகத்தான அறிவுடன் காம்ப்ளெக்ஸ் ஆக இயங்க வேண்டும்?' என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
இவற்றை மனதில் கொண்டு, முன் கூறிய படி (TCE #3), 'இப்பிரபஞ்சம் இடையறாத ஆனந்தத்தை உருவாக்க ஏதுவாகும் இயற்கையின் மிக அற்புதமான ஒரு "இன்வெஸ்ட்மென்ட்"' என்னும் ஏற்கத்தக்கதான ஒரு கூற்றை இந்நூல் காரண காரியங்களுடன் முன்வைக்கிறது.
[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]
[1] Creation is perceived as God’s Leela, in Hinduism, and “game” is one of the many meanings of the Leela.
Send Your Comments to phdsiva@mccrf.org