SoHL - TCE 07. What is the origin of this Creation? Did God or someone create this?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 7. What is the origin of this Creation? Did God or someone create this?
This is beyond the scope of this book to answer. There are an astounding number of theories and interpretations that exist in different religious and non-religious schools. It is up to the reader to believe as he/she may choose. Individual’s belief or no belief will not make a difference in the concepts outlined here since these concepts are built based on what we can comprehend from ordinary human experience and does not speculate what is beyond ordinary human comprehension.
TCE 7. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? அதைக் கடவுள் படைத்தாரா?
பிரபஞ்சத் தோற்றத்தின் மூலத்தைப் பற்றி வெவ்வேறு மதங்களிலும், மதச்சார்பு இல்லாத விஞ்ஞான வட்டத்திலும் பல வேறுபாடுள்ள, முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவற்றினால் நமக்கு தெளிவு பிறப்பதை விட குழப்பமே மிஞ்சுகிறது.
சற்று சிந்திப்போம். நாம் ஒரு அடர்ந்த பெருங்காட்டுக்குள் ஒரு சிறிய பகுதியில் வசிக்கிறோம் என்றால், அங்கிருந்து எப்படி வழி தேடி வெளியே வருவது என்று கவலைப் படுவோமா? இல்லை, அந்தக் காடு எப்படி உருவானது என்று கற்பனை செய்து காலம் கழிப்போமா? நம்மைக் காத்துக் கொண்டு வழி தேடவே முயற்சிப்போம்.
இந்நூலில் எங்கிருந்து, எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பதைப் பற்றி அலசவில்லை. அவற்றைப் பற்றி வாசகரின் நம்பிக்கை எப்படி இருந்தாலும், அதனால் இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்களை அணுகுவதில் மற்றம் இருக்காது.
நவீன யுகத்தில் வாழும் சராசரி மனிதன் தமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு, எதைத் தன் புத்தியால் கிரகித்துக் கொள்ள முடியுமோ, ஏற்று சுயமாக சோதனை செய்து, நடைமுறையில் கொண்டு பயன்பெற முடியுமோ அது போன்ற கருத்துக்களை மட்டுமே இந்நூலில் காணலாம்.
[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]
Post a Comment