SoHL - TCE 05. What is Bliss?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 5. What is Bliss?
Bliss is a central thread that links all part of the Creation, according to this book, and its multi-facet nature is elaborated here: Bliss is a unique, intense feeling of joy. The experiencer, while forgetting the external aspects, feels an intense awareness of oneness with no boundaries. This experience is a dynamic movement of consciousness that does not preclude suffering or longing leading to the Bliss. This is not something that can be forced upon but can occur with certain attitudes, practices and techniques, which will be discussed in detail in the later part of the book[1]. Bliss is different from the feeling of excitement as the latter lacks the calm, reassuring, fresh and inexhaustible feeling of oneness that Bliss provides. More importantly, the Bliss experience accompanies with the intuitive awareness of the individual in the overall expanded context and this comprehensive perspective engenders unlimited potential for creativity. Once experienced, an individual will not be able to settle for any other human experience.
TCE 5. ஆனந்தம் என்பது என்ன?
எதிர்ப்பதமும் இணைப்பதமும் இல்லாத சொல்லான ஆனந்தம் ஒரு பலவண்ணப் பூமாலையில் நாரினைப் போல இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் கோர்த்து அவற்றின் இருப்பிற்கே அர்த்தம் அளிக்கின்றது.
பன்முகத் தன்மை கொண்ட ஆனந்தம் மிகுந்த உணர்வுடன் (intense feeling) கூடிய சலிப்புத் தட்டாத ஒருவகை இன்பம். வேறுபாடுள்ள வெளிமுக பன்மையுணர்வை விடுத்து, எல்லையில்லாத ஒருமையுணர்வுடன் அதை உள்முகமாக அனுபவிப்பர். அது அமைதியும் ஆற்றலும் (calmly active) ஒருங்கே கூடிய உணர்வின் ஸஞ்சாரம். ஆனந்தத்தை அனுபவிக்குமுன்னர், அதை அடைய எடுக்கும் முயற்சியில் சில நேரங்களில் தாபமும், ஏக்கமும் நேர்வதுண்டு. யதேச்சையாக வரும் ஆனந்த அனுபவத்தைக் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. ஆனால், சில குறிப்பிட்ட செயல்கள் (உ-ம்: 'ஆனந்தத் தருவி' செயல்கள்), மனப்பாங்குகள், மனவள பயிற்சிகள் (விரிவை பகுதி 6-ல் காண்க) போன்றவற்றின் துணை ஆனந்த உணர்வை சித்திக்க ஏதுவாக இருக்கும்.
ஆனந்தத்திற்கும், எக்ஸைட்மெண்ட்டுக்கும் (excitement - குதூகல மகிழ்ச்சி) சில ஒற்றுமைகள் இருந்தாலும், அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் தென்றலுக்கும், புயலுக்கும் இடையே உள்ளது போல.
அதீத மகிழ்ச்சியால் (excitement) மனத்தில் தோன்றும் ஒரு வகை ஆரவார எழுச்சி, சோர்வு, விரக்தி, கண்மூடித்தனமான பற்று, தன்னிலை மறந்த(self-forgetting) தடுமாற்றம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கும்.
மாறாக, ஆனந்த அனுபவத்தில் தன்னிலையை மறக்காமல், குறுகிய வட்டத்தில் இருக்கும் தன்னிலையை அறிவுணர்வுடன் கடப்பதினால் (self-transcending) அவ்வனுபவம் மிக்க நன்மை தருகிறது.
ஆனந்தத்தின் முக்கிய பயன்கள்:
ஆனந்த அனுபவத்தில் நாம் தன்னிலையை அறிவுணர்வுடன் கடப்பதினால் உருவாகும் விரிவான கண்ணோட்டம், முன்னர் நம் எண்ணத்திற்குள் வாராத புதுவிஷயங்களை நமக்கு புலப்படுத்துகின்றன. அதனால், கஷ்டமான பிரச்சனைகளை நாம் தீர்க்க வழி உருவாகின்றது.
ஆனந்தத்தை அனுபவித்த ஒருவரின் மனத்தில் அதைவிட தரம் குன்றிய விஷயங்களின் கவர்ச்சி எடுபடுவதில்லை. தவறான பழக்கங்களின் பிடி தளர்வதினால் அவற்றில் இருந்து அவர் விடுபட, மாற்று வழி கிடைக்கின்றது.
[தன்னிலை = selfish or ego consciousness = யான், எனது என்னும் பற்று]
Send Your Comments to phdsiva@mccrf.org