SoHL - TCE 04. How do we know, we can generate new Bliss in Creation?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
There are many instances where Bliss is experienced within Creation. The most common and familiar experiences are: during deep sleep and during sexual orgasm, but they both have limitations. The experience in deep sleep is only known after the fact, due to being unaware during the state of deep sleep and in sex, it becomes counter-productive with overuse or unilateral drive by force. These two are not just limited to humans, other life-forms also do experience but in a lesser degree. The following Bliss instances are not common across the species but predominantly experienced by humans that can be consciously performed to create new opportunities: in selfless giving of anything worth, in contemplating about the creation’s purpose and design, in seeking earnestly to get relieved from sufferings of the world, in sympathizing with others’ problems and helping to solve their problems, in being truly thankful for the things one has and many more similar “self-transcending” actions or attitudes and also in deep meditative states (intuitive inspirations, experiencing stillness, etc.). This set of conscious actions are performed by humans are termed as “Bliss-gen” actions.
TCE 4. உலகில் எப்படி ஆனந்தம் புதிதாக உருவாகிறது என்று தெரிந்து கொள்வது?
ஆனந்தம் அடையும் பலவித தருணங்களில் மிகவும் பரிச்சயமான இரண்டு: ஆழ்ந்த உறக்கம், உடலுறவின் உச்ச கட்டம். இவ்விரண்டும் மனித இனத்திற்கு மட்டும் அன்றி பல்வேறு ஜீவராசிகளிலும் காணப்படுகின்றது. ஆனால் மேல்கூறிய பிரபஞ்ச நோக்கில் இருந்து பார்த்தால் இவை சற்றுக் குறைபாடுள்ளதாக உள்ளன. ஏனெனில், ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவிக்கும் அறிவுணர்வு உறங்குபவருக்கு இல்லை, உறங்கி எழுந்த பின் தான் 'நாம் நன்கு உறங்கினோம்' என்று அறிகிறோம். உடலுறவில் கணப்பொழுது கிடைக்கும் சுகத்தை அதிகப்படுத்த விழைந்தால் அது ஆரோக்கியத்திற்கே ஊறு விளைவித்து நோக்கத்திற்கு எதிர்மாறான பயனைத் தருகிறது.
இவ்விரண்டைத் தவிர கீழ்க்கண்டவை பொதுவாக மனித வாழ்வில் ஆனந்தத்தை தரும் செயல்களாக உள்ளன: தன்னலம் அற்ற ஈகை, தோற்றத்தின் நோக்கத்தை, இயக்கத்தை பற்றி ஆராய்ந்து, சிந்தித்தல், பிறர் படும் துயரம் குறித்து மனம் இரங்குதல், துயரம் களைய இயன்றவரை உதவுதல், மனமுவந்து நன்றியறிதல் போன்ற "தன்னிலை கடந்து" (Self-transcendence) செய்யும் பல செயல்கள். இவைகளோடு, ஆழ்ந்த தியானத்தின் போதும் ஆனந்தத்தை நன்கு அறிவுணர்வுடன் அனுபவிக்க முடிகிறது. இவ்வாறு, சுய முயற்சியால் செய்யும் ஆனந்தத்தைத் தருவிக்கும் செயல்கள், 'ஆனந்தத் தருவி'கள் (Bliss-gen actions) என இந்நூலில் குறிக்கப் படுகின்றன.
[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]
Post a Comment