SoHL - TCE 03. Is there any plausible purpose behind the Creation?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 3. Is there any plausible purpose behind the Creation?
This theory postulates the purpose as follows: No division can take place from a whole without involving some loss unless the parts will be able to generate new gains in order to compensate the loss so that the resultant will be same or more than the initial whole, analogous to business investments model. Similarly, the Creation is expecting the parts of the creation to generate new Bliss, with the target of Absolute, ever-expanding Bliss. Without the generation of new Bliss, the Absolute cannot retain its originality due to the loss in relativistic creation. Despite the complexity in Creation’s design, a singular, consistent, and sure method of self-transcendence indicates that the new generation of Bliss is possible in the Creation.
TCE 3. பிரபஞ்சத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
முழுமையான ஒன்றினை பல பாகங்களாகப் பிரிக்க வேண்டுமெனில், கழிவின்றி (loss, விரயம், செலவு) அவற்றைப் பிரிக்க முடியாது. அந்த பாகங்கள் தாம் முதலில் இருந்ததை விட அதிகப்படியான ஆக்கம் (gain) தருவனவற்றை உற்பத்தி செய்தால் ஒழியப் பிரிவினால் ஆன கழிவினை ஈடு செய்ய முடியாது. உதாரணமாக, வியாபாரத்தில் சிறிய தொகை முதலீடு செய்து புதிய உற்பத்தி செய்து விற்று அதற்கும் மேல் லாபம் ஈட்டுவது போல.
அதே போல், இப் பிரபஞ்சம் அதனில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் ஆனந்தத்தை மென்மேலும் பெருக்கும் வண்ணம் வடிவமைக்கப் பெற்றுள்ளது. அந்த புதிய ஆனந்தம் இல்லையெனில், முன்னம் இருந்த ஆனந்தத்தை விட இப்பிரபஞ்ச பகுதிகளின் கழிவால் அது அருகி காலப்போக்கில் குன்றிப் போய் விடும்.
மேலும், பலகோடி விதமான ஜீவராசிகள் வாழும் இந்த விசித்திர உலகத்தை உற்று நோக்குகையில், 'தன்னிலை கடந்தால் இன்பம் தோன்றும்' என்ற ஒரு நிச்சயமான வழிமுறை அடித்தளமாய் இருப்பதைப் பலவிதங்களில் கண்டு கொள்ள முடிகிறது.
இக்காரணங்களினால், ‘புதிய ஆனந்தத்தை இடையறாமல் உருவாக்குவதே’ இப்பிரபஞ்சத்தின் நோக்கமாக இருக்கும் என்று இந்நூல் கருத்தில் கொண்டு, பலவிதமான உலக இயக்கங்களில் இந்நோக்கத்தைச் சார்ந்து தென்படும் கருத்துக்களை வாசகர் முன் வைக்கின்றது.
[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]
Send Your Comments to phdsiva@mccrf.org